‘கூட்டணிக்கு வாங்க.. எம்.பி சீட் தருவோம்’ நாடாளுமன்றத்தில் வைகோவுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்!
MDMK Chief Vaiko : மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து வைகோ 2025 ஜூலை 24ஆம் தேதியான இன்று ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூட்டணியில் சேர அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்திலேயே வைகோவுக்கு அழைப்பு விடுத்தது பேசும் பொருளாக மாறியுள்ளது.

டெல்லி, ஜூலை 24 : மாநிலங்களவை எம்.பி பதவியில் இருந்து வைகோ (Vaiko) 2025 ஜூலை 24ஆம் தேதி இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், பாஜக கூட்டணி வருமாறு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்திலேயே அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே, மதிமுக திமுகவில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக அரசியல் கட்சி வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், மத்திய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவில் சண்முகம், அப்துல்லா, வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவி சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் 2025 ஜூலை 24ஆம் தேதியான இன்றுடன் நிறைவடைந்தது. இவர்களில் பி.வில்சன் மட்டுமே மீண்டும் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, கடைசி நாளான இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தங்களின் கடைசியை உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றினார். இதற்கிடையில், பாஜக கூட்டணியில் சேர வைகோவுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்தார். ராமதாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் பேசுகையில், “எனக்கு வைகோவை வழி அனுப்பி வைக்க பிடிக்கவில்லை. வைகோ மீண்டும் எம்.பி ஆகலாம். எங்கள் கூட்டணிக்கு அவர் வந்தால், எப்போது வரவேற்கிறேன். தமிழகத்தில் வைகோவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 1990ஆம் ஆண்டில் அவர் முதன்முதலில் மக்களவைக்கு வந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அதனால், அவரை வழியனுப்பி வைக்க எனக்கு விருப்பம் இல்லை” என கூறினார்.
Also Read : உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்..!




‘கூட்டணிக்கு வாங்க.. எம்.பி சீட் தருவோம்’
நாடாளுமன்றத்திலேயே வைகோவுக்கு கூட்டணி சேர அழைப்பு விடுத்தது பேசும் பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே, திமுக கூட்டணியில் உள்ள வைகோ, வேறு கூட்டணிக்கு செல்வதாக பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பாஜக கூட்டணியில் சேர வைகோவுக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது.
Also Read : ’கடமையை செய்ய போகிறேன்’ எம்.பியாக பதவியேற்கும் கமல்ஹாசன்.. இவருக்கு இவ்வளவு சலுகைகளா?
தேர்தலுக்கு நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சுகள் நடந்து வருகிறது. இதில் குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து வைகோ விலகுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்கிறது. இது தராத பட்சத்தில், திமுக கூட்டணியில் மதிமுக விலகும் என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.