உடல்நலக்குறைவு காரணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா
Vice President's Farewell Note : இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜெகதீப் தங்கர், தனது உடல்நலக்குறைவு காரணமாக திடீரென ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலைில் ஜூலை 21, 2025 அன்று தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். அவரது இந்த முடிவால் நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி நிலவுகிறது.

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக (Vice President) பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் (jagdeep dhankhar) , தனது உடல்நலக்குறைவு காரணமாக திடீரென ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது 73 வயதான ஜெகதீப் தன்கர், கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டதாகவும், தன்னுடைய உடல்நிலை அவரை தொடர்ந்து அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்வதில் உள்ள சிரமம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். இந்த நிலைில் ஜூலை 21, 2025 அன்று தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு (Draupadi Murmu) அனுப்பி வைத்தார். அவரது இந்த முடிவால் நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி நிலவுகிறது.
ஜகதீப் தன்கர் முன்னதாக மேற்குவங்க மாநில ஆளுநராகவும், அதற்கு முந்தைய காலத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். துணை ஜனாதிபதியாக 2022ஆம் ஆண்டு பதவி ஏற்ற அவர், பாராளுமன்றத்தின் உச்ச நிலையிலுள்ள ஒரு முக்கிய பொறுப்பை நிதானமாக மற்றும் மதிப்புடன் மேற்கொண்டதற்காக பாராட்டப்பட்டவர்.




குடியரசுத் தலைவருக்கு ஜெகதீப் தங்கர் எழுதியுள்ள கடிதம்
மாண்புமிகு பிரதமர் மற்றும் சிறப்புமிக்க அமைச்சரவை உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை. நான் என் பதவிக்காலத்தில் பலவற்றை கற்றுக்கொண்டேன். மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நான் பெற்ற அன்பும் நம்பிக்கையும் ஈடுசெய்யமுடியாத அனுபவமாகவும், என்றும் என் நினைவுகளில் நிலைத்து நிற்கும். இந்த மகத்தான ஜனநாயகத்தின் துணைத் தலைவராக இருந்த காலத்தில் நான் பெற்ற அனுபவங்களுக்கும் அறிவிற்கும் நான் மிகுந்த நன்றியுடன் இருக்கிறேன்.
இதையும் படிக்க : மாலத்தீவு, இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன?
இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும், வரலாறு காணாத வகையில் வளர்ச்சியடைந்த முன்னேற்றங்களையும் நான் நேரில் பார்த்து, அதில் பங்கேற்றது எனக்கு பெருமை. இந்த கௌரவமிக்க பதவியிலிருந்து விலகும் வேளையில், பாரதத்தின் உலகளாவிய எழுச்சி மற்றும் வியக்கத்தக்க சாதனைகளை நினைவுகூரும் பொழுது பெருமிதமும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையும் நமக்கு உருவாகிறது.
தனது ராஜினாமா குறித்து ஜெகதீப் தன்கரின் கடிதம்
Vice President Jagdeep Dhankhar resigns from his post “to prioritise health care and abide by medical advice.” pic.twitter.com/IoHiN7VGAR
— ANI (@ANI) July 21, 2025
இதையும் படிக்க : முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்ட நெரிசல் தவிர்க்க புதிய முயற்சி.. இனி இவ்வளவு டிக்கெட் மட்டும் தான்..
துணை ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு, ஜெகதீப் தன்கர் 2019 முதல் 2022 ஆண்டு வரை மேற்கு வங்க ஆளுநராக இருந்தார். மேலும்1990 முதல் 1991 வரைல மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சராக இருந்தார். இதற்கு முன்பு, 1989 முதல் 1991 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். மேலும் 1993 மற்றும் 1998 க்கு இடையில் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.