Narendra Modi : பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி.. ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்!
PM Modi's Bihar and West Bengal Visit | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் பயணம் செய்கிறார்.

புதுடெல்லி, ஜூலைம் 18 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) பீகார் (Bihar) மற்றும் மேற்கு வங்கம் (West Bengal) மாநிலங்களுக்கு இன்று (ஜூலை 18, 2025) பயணம் செய்கிறார். பீகாரில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவது, முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் இந்த மாநிலங்களுக்கு செல்கிறார். மேலும் புதிய சில மேம்பாட்டு திட்டங்களையும் அவர் அறிமுகம் செய்து வைக்க உள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடியில் இன்றைய பீகார் மற்றும் மேற்கு வங்க பயண திட்ட விவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குறிப்பாக பீகாரின் மோதிஹரியில் ரூபாய் 7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், அங்கு ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி பீகார் செல்கிறார்.




இதே போல தர்பங்காவில் புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவையும் (Tech Park), பாட்னாவில் மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள அதிநவீன மென்பொருள் மேம்பாட்டிற்கான தொடக்கநிலை ஆலையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அது மட்டுமன்றி பீகாரில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் நான்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை (Amrit Bharat Train Service) பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைக்க உள்ளார்.
இதையும் படிங்க : ஓய்வுக்கு பிறகு என்ன செய்வேன்? அமித் ஷா சொன்ன விஷயம் இதுதான்!
இரு மாநில பயணம் குறித்து பதிவிட்ட பிரதமர் மோடி
Will be in Motihari, Bihar, tomorrow, 18th July. Development works worth Rs. 7200 crore will be dedicated to the nation or their foundation stones would be laid. These works cover Software Technology Parks, four new Amrit Bharat trains, road projects and more.…
— Narendra Modi (@narendramodi) July 17, 2025
மேற்கு வங்கத்தில் என்ன திட்டம்?
அதனை தொடர்ந்து மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி, துர்காபூரில் ரூபாய் 5,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அது மட்டுமன்றி ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை அவர் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது