மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் பலி.. பீகாரில் சோக சம்பவம்!
Bihar Lightning Strikes Kill 19 | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பீகாரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பீகாரில் நேற்று (ஜூலை 17, 2025) ஒரே நாளில் மட்டும் மின்னல் தாக்கி 19 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார், ஜூலை 18 : பீகாரில் (Bihar) மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பீகாரில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், பீகாரின் மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தினமும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு இடைவிடாது கன மழை பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கனமழை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பருவமழை காரணமாக பல சிக்கல்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் பீகாரில் ஒரே நாளில் 19 பேர் மின்னல் தாக்கி உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Odisha Student Suicide Case: பேராசியர் மீது பாலியல் புகார்.. நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு.. ஒடிசாவில் வெடித்த போராட்டம்!




பீகாரை உலுக்கிய சோக சம்பவம்
பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக நலந்தாவில் ஐந்து பேரும், வைஷாலியில் நான்கு பேரும், பங்கா மற்றும் பாட்னாவில் தல இரண்டு பேரும் மின்னலுக்கு பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல ஷேக்புரா பகுதியிலும், நவாடா, ஜெகனாபாத், அவுரங்காபாத், ஜமுய் மற்றும் சமாஸ்துபூர் மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர்.
மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம்
பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 19 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பீகாரை சோகத்தை மூழ்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.