Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடர் கனமழை எதிரொலி.. அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து..

Amarnath Yatra Cancelled: தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரைப் பயணம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பயணத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் இப்பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர் கனமழை எதிரொலி.. அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து..
அமர்நாதில் மீட்பு பணிகள்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jul 2025 11:51 AM

அமர்நாத், ஜூலை 17, 2025: கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பஹல்காம் மற்றும் பால்டால் அடிப்படை முகாம்களில் இருந்து அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இரு வழித்தடங்களிலும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அடிப்படை முகாம்களிலும் இருந்த இந்தப் பயணம் நிறுத்துவதற்கு முன்பு, சீரமைப்பு பணிகளை முடிக்க எல்லையோர சாலைகள் அமைப்பு கனரக வாகனங்களையும் இயந்திரங்களையும் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து:


கவுண்டர்பால் மாவட்டத்தில் பால்டல் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் உயிர் இழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த யாத்திரை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த பிறகு நாளை அதாவது ஜூலை 18 2025 ஆம் தேதி முதல் இந்த யாத்திரை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வானிலை மோசமாக இருந்தால் இந்த யாத்திரை நாளையும் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை 3 ஆம் தேதி தொடங்கியதில் இருந்து 2025 ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது சுமார் 2.47 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத்திற்கு சென்று வழிபாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூலை 2ஆம் தேதி லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இந்த பயணத்தை தொடங்கி வைத்தார்.

4 லட்சம் பேர் முன்பதிவு:

இந்த யாத்திரைப் பயணம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பயணத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு 5.10 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்ட நெரிசல் தவிர்க்க புதிய முயற்சி.. இனி இவ்வளவு டிக்கெட் மட்டும் தான்..

அமர்நாத் கோயில் என்பது இயற்கையாக உருவான பனி லிங்கத்தை கொண்டுள்ளது. ஆண்டில் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த பனி லிங்கத்தை தரிசிக்க முடியும். ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை என்பது 38 நாட்களுக்கு நடைபெறுகிறது அதாவது 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த யாத்திரை முடிவடைகிறது.