ஓய்வுக்கு பிறகு என்ன செய்வேன்? அமித் ஷா சொன்ன விஷயம் இதுதான்!
Amit Shah Shares Post Retirement Plans : ஓய்வுக்கு பிறகு தான் என்ன செய்ய போகிறேன் என்பதை மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், ஒரு அமைச்சராக தனது பயணம் குறித்தும் அமித் ஷா மனம் திறந்து பேசியுள்ளார். தான் ஓய்வுக்கு பிறகு, இயற்கை விவசாயம், வேதங்கள், உபநிடதங்கள் வாசிப்பிலும் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.

டெல்லி, ஜூலை 09 : அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற (Amit Shah Post Retirement Plans) பிறகு தனது திட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) பகிர்ந்துள்ளார். அதாவது, ஓய்வுக்கு பிறகு, இயற்கை விவசாயம் செய்யப்போவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் கூட்டுறவுத் தொழிலாளர்களைச் சேர்ந்த பெண்களுடன் நடைபெற்ற சஹ்கார் சம்வாத் என்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அதில் கொண்ட அமித் ஷா, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். குறிப்பாக, தனது ஓய்வுக்கு பிறகு தனது திட்டம் குறித்து அமித் ஷா பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், ”நான் ஓய்வு பெற்ற பிறகு, என் வாழ்நாள் முழுவதையும் வேதங்கள், உபநிடதங்கள் வாசிப்பதிலும் மற்றும் இயற்கை விவசாயத்திற்காக அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன். என்னிடம் 8,000 புத்தகங்கள் இருக்கிறது. ஆனால், அவற்றை படிக்க நேரமில்லை. அதனால் நான் அதில் இருக்கும்போது எனது புத்தகங்களைப் படிப்பேன், இசையைக் கேட்பேன்.
இயற்கை வேளாண்மை, கரிம வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது. ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் கோதுமை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, புற்றுநோய் என உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கிறது. இயற்கை விவசாயம் உடலை நோயற்றதாக மாற்ற உதவுவது மட்டுமல்லாமல், மருந்துகளைச் சார்ந்திருப்பதையும் குறைக்கிறது. இயற்கை வேளாண்மை, நோய்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், பயிர் உற்பத்தித்திறனையும் மேம்படுத்துகிறது. நான் எனது சொந்த நிலத்தை இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இதனால் நான் 1.5 மடங்கு அதிக பயன்கனை பெறுகிறேன்.” என்று கூறினார்.




Also Read : ரூ. 1.05 லட்சம் கோடி மதிப்புள்ள 10 இராணுவ கொள்முதல் திட்டம்.. மத்திய அரசு ஒப்புதல்..!
ஓய்வு பிறகு என்ன செய்வேன்?
Ahmedabad, Gujarat: Union Home Minister Amit Shah says, “I have decided that after retirement, I will dedicate the rest of my life to studying the Vedas, Upanishads, and natural farming. Natural farming is a scientific experiment that offers many benefits…” pic.twitter.com/BQBC6DX4Ps
— IANS (@ians_india) July 9, 2025
அதிக மழை பெய்யும்போது, பொதுவாக நிலத்தில் தண்ணீர் வெளியேறும். ஆனால், இயற்கை உரங்களை பயன்படுத்தும் நிலத்தில் இருந்த ஒரு சொட்டு கூட தண்ணீர் வெளியேறாது. ஏனென்றால் இயற்கை விவசாயம் நீர்ப்பிடிப்புப் பாதைகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதிகப்படியான உரங்களைப் பயன்படுத்துவது அந்த நீர்ப்பிடிப்புப் பாதைகளை அழித்துவிடுகிறது.
Also Read : நடைமுறைக்கு வரும் தேசிய விளையாட்டு கொள்கை.. ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி அமைச்சரவை..!
ஒரு அமைச்சராக தனது பயணம் குறித்தும் பேசிய அமித் ஷா, “நான் நாட்டின் உள்துறை அமைச்சரானபோது, எனக்கு மிக முக்கியமான துறை கிடைத்ததாக எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட நாளில், விவசாயிகள், ஏழைகள், கிராமங்கள் மற்றும் நாட்டின் விலங்குகளுக்காகப் பணியாற்றும், அதை பெரிய துறையைப் பெற்றதாக உணர்ந்தேன்” என கூறினார்.