National Sports Policy 2025: நடைமுறைக்கு வரும் தேசிய விளையாட்டு கொள்கை.. ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி அமைச்சரவை..!
PM Modi Government Sports Initiative: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, தேசிய விளையாட்டு கொள்கை 2025 ஐ அங்கீகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு கொள்கையை மாற்றியமைக்கும் இது, 2036 ஒலிம்பிக்கில் உலகளாவிய விளையாட்டு சக்தியாகவும், 2047-ல் உலகின் முதல் 5 விளையாட்டு நாட்களில் ஒன்றாகவும் இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விளையாட்டை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதும் இதன் நோக்கமாக கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 1ம் தேதி தேசிய விளையாட்டுக் கொள்கை 2025க்கு (National Sports Policy 2025) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2001ம் ஆண்டின் பழைய கொள்கையை மாற்றியமைக்கும். இந்த புதிய கொள்கையின் நோக்கம், 2036 ஒலிம்பிக்கிற்குள் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு வல்லராக மாற்றுவதாகும். அதேநேரத்தில், 2047க்குள் இந்தியாவை முதல் 5 விளையாட்டு நாடுகளில் ஒன்றாக மாற்றுவதே கேலோ இந்தியா கொள்கையின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவை முன்னணி விளையாட்டு நாடாக மாற்றும் பாதையில் கொண்டு செல்வதாகும். இதன் கீழ், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெண்களுக்கான விளையாட்டுகளில் பங்கேற்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டுக் கொள்கை 2025ன் 5 முக்கிய குறிப்புகள்:
உலக அளவில் விளையாட்டுகளை ஊக்குவித்தல்:
இந்தியாவில் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டங்கள் வரை விளையாட்டு திட்டங்களை வலுப்படுத்துதல் ஆகும். போட்டி லீக்குகள் மற்றும் போட்டிகளை நடத்த ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகும்.
பொருளாதார வளர்ச்சிக்கான விளையாட்டு:
#Cabinet approves the National Sports Policy (NSP) 2025, a landmark initiative aimed at reshaping the country’s sporting landscape and empowering citizens through sports.
The new policy supersedes the existing National Sports Policy, 2001, and lays out a visionary and strategic… pic.twitter.com/2QK5D47dF6
— PIB India (@PIB_India) July 1, 2025
விளையாட்டு சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் முக்கிய சர்வதேச நிகழ்வுகளை இந்தியாவிற்கு ஈர்த்தல். விளையாட்டு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இந்தத் துறையில் தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவை ஊக்குவித்தல் ஆகும்.
சமூக மேம்பாட்டிற்கான விளையாட்டு:
பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், பழங்குடி சமூகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக முன்னுரிமை அளிக்கப்படும். பூர்வீக மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை புதுப்பித்து ஊக்குவிக்கவும், விளையாட்டுகளை ஒரு தொழில் விருப்பமாக நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெகுஜன இயக்கமாக விளையாட்டு:
நாடு தழுவிய பிரச்சாரங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்வுகள் மூலம் வெகுஜன பங்கேற்பு மற்றும் உடற்பயிற்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களுக்கான உடற்பயிற்சி குறியீடுகளைத் தொடங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுதல் ஆகும்.
கல்வியுடன் விளையாட்டை ஒருங்கிணைத்தல்:
பள்ளி பாடத்திட்டத்தில் விளையாட்டை ஒருங்கிணைத்தல், விளையாட்டுக் கல்வி மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல் போன்றவை ஆகும்.
தேசிய விளையாட்டு கொள்கை 2025 ஒப்புதலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின் வைஷ்ணவ், “கடந்த 11 ஆண்டுகளில் பிரச்தமர் மோடி விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக கிராமப்புறங்களில் திறமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். புதிய கொள்கை இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். கொள்கையின் 2வது முக்கிய நோக்கம் விளையாட்டை மக்கள் இயக்கமாக மாற்றுவதாகும்” என்று தெரிவித்தார்.