ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ரஃபேல் எக்ஸ் கார்ட்.. வான்வழி போரில் ஒரு திருப்புமுனை..
Rafale AI X Guard: ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ரஃபேல் விமான, வான்வழி போரில் ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்தது என முன்னாள் அமெரிக்க விமானப்படை F-15E மற்றும் F-16 விமானியான ரியான் போடன்ஹைமர் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பாகிஸ்தானுடன் நான்கு நாள் ராணுவ நடவடிக்கையின் போது செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய முன்னாள் அமெரிக்க விமானப்படை F-15E மற்றும் F-16 விமானியான ரியான் போடன்ஹைமர், ஆபரேஷன் சிந்தூரை நவீன வான்வழி போரில் ஒரு திருப்புமுனை என்று தெரிவித்துள்ளார். இதனை idrw.org வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலின் மையமாக ரஃபேலின் X-கார்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது பாகிஸ்தானிய வான் அச்சுறுத்தல்களை நடுநிலையாக்குவதில் மிக முக்கிய பங்கை கொண்டிருந்தது .
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ரஃபேல் எக்ஸ் கார்ட்:
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் எக்ஸ் கார்ட் அமைப்பை ரஃபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கியுள்ளன. இது 500 வாட்ஸ் 360 டிகிரி ஜாமீங் சிக்னலை உருவாக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. இந்த கருவி 30 கிலோ கிராம் எடையும், 100 மீட்டர் நீளமும் பைபர் ஆப்டிக் கேபிளில் விமானத்தின் பின்னால் அமைந்துள்ளது. இது ரஃபேல் ஜெட் விமானத்தின் ரேடார் சிக்னல்கள் மற்றும் டாப்ளர் விளைவை நகலெடுத்து, எதிரி ரேடார் அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் இதனை கண்டறிவது கடினமாக்கும்.
மேலும் பாகிஸ்தானின், சீனாவால் தயாரிக்கப்பட்ட PL-15E வான்-க்கு-வான் ஏவுகணைகள் மற்றும் J-10C போர் விமானங்கள் உண்மையாக இந்தியா ஜெட் விமானங்களை கண்டறியவோ அல்லது குறி வைக்கவும் முடியவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தந்திரமான வேலை.எதிரி ரேடாரை குழப்பி தவறாக வழி நடத்திய ஏவுகணை அமைப்புகளை குழப்பி இந்த செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவின் PL-15 இன் ஏற்றுமதி பதிப்பான PL-15E ஏவுகணை, இந்த செயலுக்கு எதிராக செயல்பட முடியவில்லை என்றும் X-Guard பாகிஸ்தானின் J-10C போர் விமானங்களில் உள்ள KLJ-7A AESA ரேடாரை, அவை ரஃபேல் ஜெட் விமானங்களில் தாக்கியதாக குழப்பியிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எக்ஸ் கார்ட்:
இந்த X-Guard, AN/ALQ-50 அல்லது ADM-160 MALD போன்ற பழைய அமெரிக்க அமைப்புகளை விட வேகமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டு வினாடிகளுக்குள் ஏவ முடியும். மேலும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைகப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் வான்வழிப் போரின் தன்மையை எவ்வாறு மாற்றும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் எடுத்துக்காட்டுகிறது. எக்ஸ்-கார்டு போன்ற கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டையோ அல்லது செயல் திறனையும் இழக்காமல் தாக்குதல் நிலையை குறைக்க முடிந்தது. எதிர்கால வான் ஆதிக்கம் உடல் ரீதியான ஈடுபாட்டை விட, மின்னணு மூலம் சார்ந்து இருக்கலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.