Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’கடமையை செய்ய போகிறேன்’ எம்.பியாக பதவியேற்கும் கமல்ஹாசன்.. இவருக்கு இவ்வளவு சலுகைகளா?

Kamal Haasan MP : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பியாக 2025 ஜூலை 25ஆம் தேதியான நாளை பதவியேற்க உள்ளார். மேலும், முதல்முறையாக நாடாளுமன்றத்தில் பேச உள்ளார். இது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார் .

’கடமையை செய்ய போகிறேன்’ எம்.பியாக பதவியேற்கும் கமல்ஹாசன்.. இவருக்கு இவ்வளவு சலுகைகளா?
கமல்ஹாசன்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Jul 2025 15:15 PM

சென்னை, ஜூலை 24 : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை (Kamal Haasan)  2025 ஜூலை 25ஆம் தேதியான நாளை ராஜ்யசபா எம்.பியாக (Rajya Sabha MP) பதவியேற்க உள்ளார். இதற்காக, 2025 ஜூலை 24ஆம் தேதியான இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தன்னுடைய கடமையை செய்யப் டெல்லி போகிறேன் என குறிப்பிட்டார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா, எம்.சண்முகம், பி.வில்சன், அதிமுக சார்பில் சந்திரசேகரன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக் காலம் 2025 ஜூலை 24ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது. 2025 ஜூலை 25ஆம் தேதியான நாளை புதிய எம்.பிக்கள் பதவியேற்க உள்ளனர். அதன்படி, திமுக சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பதவியேற்க உள்ளனர்.மேலும், அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபாலும் எம்.பியாக பதவியேற்க உள்ளனர்.

எம்.பியாக பதவியேற்கும் கமல்ஹாசன்

இதில் குறிப்பாக, மநீம தலைவர் கமல்ஹாசான  மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.  தமிழகத்தின் பிரதிநிதியாக அவர் நாடாளுமன்றத்தில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. நாளை  கமல்ஹாசன் எம்.பியாக பதவியேற்கும் நிலையில்,  இதற்காக அவர், 2025 ஜூலை 24ஆம் தேதியான  இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Also Read : வாளோடு மேடைக்கு வந்த தொண்டர்.. கடுப்பான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்..

டெல்லி  புறப்பட்ட கமல்ஹாசன்


அவர் பேசுகையில், “எனது கடமையை செய்ய டெல்லி செல்கிறேன். ஒரு இந்தியனாக எனக்கு கொடுப்பட்டிருக்கும் மரியாதை கடமையாக இதை கருதுகிறேன். எனது கன்னிப் பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்லக் கூடாது. சில விஷயங்களை இங்கு பேசுவது போல அங்கு பேசக் கூடாது. அங்கு பேசுவது போன்று இங்கு பேசக் கூடாது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் நிறைய செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை நான் நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன். நேர்மையாகவும், தீவிரமாகவும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்காகவும் பேச என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். என் மீது வைக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கிறேன்” என கூறினார்.

Also Read : பேச்சை குறைத்துவிட்டு வேலையை செய்ய வேண்டும் – தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை..

எம்.பிக்கு என்னென்ன சலுகைகள்?

ராஜ்சயபா எம்.பியாக இருப்பவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் கூட்டத் தொடர்களின்போது தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்காக ரூ.2,000 வழங்கப்படுகிறது. ஒருமுறை எம்.பி பதவி வகித்தாலும், பதவி காலத்துக்கு பிறகு, அவர்களின் சீனியாரிட்டி பொருத்து ஓய்வூதியமாக மாதம் ரூ.25,000 வரை வழங்கப்படும்.

எம்.பியாக பதவியில் இருக்கும் வரை, இலவச மின்சார சேவை, இலவச தண்ணீர் வசதி வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் 1,50,000 இலவச தொலைபேசிய அழைப்புகளும், அவர்களின் குடியிருப்புகளுக்கு இலவச இணைய வசதி அளிக்கப்படுகிறது.  இது தவிர எம்.பிக்களுக்கு டெல்லியில் ஒரு வீடு வழங்கப்படும்.

முதல்முறையாக எம்.பியாக தேர்வாகும் நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும். மேலும், எம்.பிக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் (CGHS) கீழ் இலவச மருத்துவ சேவையை பெற முடியும். இது அனைத்து சேவையும் பதவியாக பதவியேற்கும் கமல்ஹாசனுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.