Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kamal Haasan : மாநிலங்களவை உறுப்பினர்… கமல் ஹாசனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் சங்கத்தினர்!

Actors Association Congratulates Kamal Haasan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவர் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து அரசியல் கட்சியிலும் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து நடிகர்கள் சங்கத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Kamal Haasan : மாநிலங்களவை உறுப்பினர்… கமல் ஹாசனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் சங்கத்தினர்!
காமல் ஹாசன் மற்றும் நடிகர் சங்கத்தினர் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 15 Jun 2025 17:46 PM

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 234 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. தனது சிறுவயதிலிருந்து சினிமாவில் ஒரு அங்கமாக இருந்து வரும் இவர், பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி பான் இந்திய வரை வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் திரைத்துறையையும் கடந்து அரசியல் கட்சியிலும்  (Political party) இருந்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் கடந்த தேர்தலில் திமுக (DMK) (திராவிட முன்னேற கழகம்) உடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிட்டார். இவ்வாறு நடிப்பதையும் கடந்து அரசியலிலும் ஆர்வம் காட்டிவரும் கமல்ஹாசன், சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராகத் (Member of the Rajya Sabha) தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு சினிமா மற்றும் அரசியல்வாதிகள் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் (South Indian Actors’ Association) சார்பாகவும் நேரில் சந்தித்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகரும், நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான பிரேம் குமார் வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரேம் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் நடிகர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் சங்க மேலாளர் தாமராஜ், பிரேம் குமார் எனப் பலரும் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் தக் லைஃப் படத் தோல்வி :

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்திருந்த படம் தக் லைஃப். இந்த படமானது பின் இந்திய மொழியில் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் முக்கிய நடிகையாக திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படம் கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

திரையரங்குகளில் வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றது என்று கூறலாம். இப்படமானது வெளியாகி 10 நாட்களைக் கடந்த நிலையில், இதுவரை மொத்தமாக ரூ 50 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது. சுமார் ரூ300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படும் இப்படம் இதுவரை வெறும் ரூ 50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் இப்படத்தின் வரவேற்பும் திரையரங்குகளில் கணிசமாகக் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி - FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!
ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி - FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!...
ஏசியில் அதிக நேரம் இருந்தால் எலும்புகள் பாதிக்குமா?
ஏசியில் அதிக நேரம் இருந்தால் எலும்புகள் பாதிக்குமா?...
தனுஷ் - நாகார்ஜுனாவின் குபேரா பட ட்ரெய்லர் வெளியானது!
தனுஷ் - நாகார்ஜுனாவின் குபேரா பட ட்ரெய்லர் வெளியானது!...
வயிறு ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!
வயிறு ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!...
ரோஹித் அசிங்கமாக திட்டினாலும்.. ஓபனாக பேசிய சுப்மன் கில்!
ரோஹித் அசிங்கமாக திட்டினாலும்.. ஓபனாக பேசிய சுப்மன் கில்!...
காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழந்து விபத்து !
காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழந்து விபத்து !...
EX- முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு நாளை குஜராத் அரசு மரியாதை!
EX- முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு நாளை குஜராத் அரசு மரியாதை!...
ரூ.7,999 & ரூ.9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்
ரூ.7,999 & ரூ.9,999-க்கு அறிமுகமான லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்கள்...
கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? சிறுநீரக நோயாக இருக்கலாம்!
கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? சிறுநீரக நோயாக இருக்கலாம்!...
சுவையில் கலக்கும் கடாய் காளான்.. எளிய செய்முறை விளக்கம் இதோ!
சுவையில் கலக்கும் கடாய் காளான்.. எளிய செய்முறை விளக்கம் இதோ!...
படிக்கட்டுகளுக்கு அடியில் கழிவறை வைக்கலாமா? வாஸ்து சொல்வது என்ன?
படிக்கட்டுகளுக்கு அடியில் கழிவறை வைக்கலாமா? வாஸ்து சொல்வது என்ன?...