Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேச்சை குறைத்துவிட்டு வேலையை செய்ய வேண்டும் – தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை..

Kamal Haasan: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்த கமல் ஹாசன், நமக்கு நிறைய வேலை உள்ளது எனவே பேச்சை குறைத்து விட்டு வேலை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

பேச்சை குறைத்துவிட்டு வேலையை செய்ய வேண்டும் – தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை..
கமல் ஹாசன்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Jun 2025 17:39 PM

சென்னை, ஜூன் 14,2025: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய அவரது கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பேசிய அவர் நிறைய வேலை இருக்கிறது பேச்சை குறைத்துக் கொண்டு வேலையை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் உட்பட ஆறு பேர் அதாவது திமுக சார்பாகவும் அதிமுக சார்பாகவும் போட்டி இன்றி சமீபத்தில் தேர்வானார்கள். இதன் மூலமாக இந்த ஆறு பேரும் மாநிலங்களவை எம்பியாக விரைவில் பொறுப்பேற்க உள்ளனர். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் அப்துல்லா, சண்முகம், பி வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அன்புமணி ராமதாஸ் , சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த ஆறு பேருக்கு பதிலாக தற்போது அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால், திமுக சார்பில் கவிஞர் சல்மா, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், சிவலிங்கம், வில்சன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன்:


மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்ப மனு தாக்கல் ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி ஒன்பதாம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஜூன் 10 2025 ஆம் தேதி வேப்பமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக சார்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் வேட்பமுனு ஏற்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன் தொடர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நாடாளுமன்ற பதவி காலம் 2030 ஆம் ஆண்டு வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள, உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது பேசிய அவர் ” நமக்கு நிறைய வேலைகள் உள்ளது. பேச்சை குறைத்துவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இதனை நாங்கள் எங்கள் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு கொடுக்கும் அறிவுரையாகும் இதனை ஆணையாக கொண்டு செயல்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்