Vijay : இரண்டு வருடத்திற்கு ஒரு படம்.. விஜய்க்கு ரசிகை வைத்த கோரிக்கை.. தளபதி விஜய் கொடுத்த ரியாக்ஷ்ன்!
Thalapathy Vijays Reaction : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்து அசத்தி வருபவர் தளபதி விஜய். இவர் ஜன நாயகன் படத்தைத் தொடர்ந்து முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் , நடிகர் விஜய்யிடம் ரசிகை ஒருவர் வைத்த கோரிக்கைக்கு நடிகர் விஜய் கொடுத்த ரியாக்ஷ்ன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay) என்றாலே அவருக்கு ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பான் இந்திய நடிகர்களில் ஒருவராகவும், தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளமா வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார் விஜய். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தி கோட் (The GOAT). விஜய்யின் 68வது திரைப்படமான இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கியிருந்தார். கடந்த 2024ம் மானுட வெளியான இப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்று சுமார் ரூ. 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து, தனது இறுதி திரைப்படமான ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ளார்.
அரசியலில் இறங்கவிருக்கும் நிலையில், திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்துள்ள நடிகர் விஜய்யிடம் ரசிகை ஒருவர் வைத்த கோரிக்கை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று 2025, ஜூன் 15ம் தேதியில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10ஆம் மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மேடையில் நடிகர் விஜய்யிடம் பேசிய ரசிகை ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
வைரலாகும் நடிகர் விஜய்யின் ரியாக்ஷ்ன் வீடியோ :
இந்த அன்புக்கு எது ஈடாகும்❤️❤️ @TVKVijayHQ🫂🤩
#VijayHonorsStudents#ThalapathyVijay @actorvijay pic.twitter.com/GgQ4dYFmnp
— ★ᴠɪᴊᴀʏsᴀʀᴀᴠᴀɴᴀɴ 🇪🇦 (@VJ_Sarvanan) June 15, 2025
இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ரசிகை ஒருவர், விஜய் அண்ணன் தேர்தலில் நிற்கப்போவதால் இனிமேல் படத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். அது விஜய்யின் ரசிகர்களுக்குப் பெரிய இழப்புதான், ஏன்னென்றால் நானும் விஜய்யின் பெரிய ரசிகை. இந்த மேடையில் நான் விஜய் அண்ணாவிடம் இதை கூறவிரும்புகிறேன். அண்ணா, குறைந்தபட்சம் 2 வருடத்திற்கு ஒரு படத்தில் நடியுங்கள் என்று அந்த ரசிகை கோரிக்கை வைத்திருந்தார்.
அதற்குத் தளபதி விஜய் முகத்தில் புன்னகையுடன் திகைத்து நின்றார். மேலும் நடிகர் விஜய் “ட்ரை பண்ணுகிறேன் மா” என்று கூறியிருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. மேலும் விஜய்யின் ரசிகர்கள் மத்தியும் படு வைரலாகி வருகிறது.
ஜன நாயகன் படத்தின் அப்டேட் :
நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படம்தான் ஜன நாயகன். இந்த படத்தை ஹச். வினோத் இயக்க, கேவிஎன் ப்ரொடக்ஷ்ன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படமானது வரும் 2026, ஜனவரி 9ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் வரும் 2025, ஜூன் 22ம் தேதியில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து கிளிம்ப்ஸ் அல்லது படத்தில் முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.