Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya: 2 நிமிட காட்சி தான்.. 20 வருட சபதத்தை மீறிய நடிகர் சூர்யா!

Suriya Broke His 20-Year Rules : கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரை நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹிட் கொடுத்திருக்கிறது. அந்தவகையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காகத் தனது 20 வருடக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Suriya: 2 நிமிட காட்சி தான்.. 20 வருட சபதத்தை மீறிய நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யா
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Jun 2025 06:30 AM

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் கடந்த சில வருடங்களாகப் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகி பெரும் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. அவ்வாறு பல தோல்விகள் வந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதை ஒருபோதும் நிறுத்தாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் சூர்யா. இவரின் பல வருடத்தின் காத்திருப்பு மற்றும் உழைப்பிற்கு மிகுதியாக இந்த 2025ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைக் கொடுத்த படமாக அமைந்தது ரெட்ரோ (Retro). இந்த படத்திற்கு முன் சூர்யா நடித்த கங்குவா (Kanguva) படமானது பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில்,  தொடர்ந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த படமாக இருந்தது ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் (Karthik Subbaraj) இயக்கத்தில் வெளியான இப்படம் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று, பல ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஹிட் படத்தில் ஒன்றாக மாறியது.

இந்த வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சூர்யா, சூர்யா45, சூர்யா46 மற்றும் வாடிவாசல் என அடுத்தடுத்த படங்களைத் தனது கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் (Vikram) படத்தில் ரோலக்ஸ் (Rolex) கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும், அந்த ரோலில் நடித்ததற்குத் தனது 20 வருடக் கட்டுப்பாட்டை உடைத்துப் பற்றியும் பேசியுள்ளார்.

சூர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

 

ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சூர்யா பேச்சு :

நடிகர் சூர்யா முன்னதாக நேர்காணல் ஒன்றில், விக்ரம் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றியது பற்றி கூறியிருந்தார். அதில் சூர்யா “விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன் நான் சுமார் 20 வருடங்களாக எந்த படங்களிலும் சிகரெட் பிடித்தது இல்லை, நான் அந்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது நான் எனக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன். “அந்த கதாபாத்திரம் மிகவும் கெட்டவன், உன்னுடைய ரூல்ஸை உடைக்கும் நேரம் வந்துவிட்டது என்று யோசித்தேன்”. விக்ரம் படத்தில் அந்த சிகரெட் பிடிக்கும் காட்சிக்கும் முன்தான், ஷூட்டிங்கில் சிகரெட்டையே வாங்கினேன். சுமார் 20 வருடத்திற்குப் பின் அந்த காட்சியில் நடிக்கும்போதுதான் நான் சிகரரெட்டையே தொட்டேன் என்று கூறலாம்.

மேலும் எல்லா இயக்குநர்களுக்குத் தனித் தனியான நுணுக்கங்கள் இருக்கிறது. ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்தும், அந்த கதாபாத்திரத்தை பற்றியும் ஷூட்டிங் அன்று காலையில்தான் நானே பார்த்தேன். நான் அந்த படத்தில் கெட்டவன் என்று எனக்குத் தெரியும், அந்த படத்தில் மேஜர் கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன் நடித்திருந்தார்கள் என்று தெரியும். நான் வெறும் கடைசி 2 நிமிடத்தில்தான் வந்தேன். அந்த காட்சிக்காக நான் வெறும் அரை நாள் மட்டும்தான் ஷூட்டிங் சென்றேன். மேலும் நானும் அந்த ரோலில் நடிப்பதற்கு இந்தத் ஒத்திகையும் பார்க்கவில்லை, ஷூட்டிங் தொடங்கியது நானும் அப்படியே நடித்துவிட்டு வந்தேன்” என்று நடிகர் சூர்யா ஓபனாக பேசியிருந்தார்.