Nagarjuna : பண ஊழல்.. குபேரா படத்தின் கதைக்களம் இப்படித்தான் இருக்கும் – நாகார்ஜுனா!
Nagarjuna Talks About Kuberaa Movie : தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நாகார்ஜுனா. நடிகர் தனுஷ் மற்றும் இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம்தான் குபேரா. நேர்காணல் ஒன்றில் பேசிய நாகார்ஜுனா இப்படத்தின் கதைக்களம் பற்றியும் பேசியுள்ளார், அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ராயன் (Raayan). கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படத்தை தனுஷ் இயக்கி, அதில் அவரே முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த இடமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். இந்த படத்தைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும், இளம் நடிகர்களை வைத்து இயக்கியிருந்தார். இதுவும் ஓரளவுதான் வரவேற்பைப் பெற்றது. மேலும் தனது நடிப்பு மற்றும் இயக்கத்தில் இட்லி கடை (Idly Kadai) என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025, அக்டோபர் 1 தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு முன் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம்தான் குபேரா (Kuberaa). இந்த படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் நடிகர் தனுஷுடன், நடிகர் நாகார்ஜுனாவும் (Nagarjuna) இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் நாகார்ஜுனா கலந்துகொண்டார். அதில் அவர் குபேரா படத்தின் கதைக்களம் பற்றிப் பேசியிருக்கிறார். அது பற்றி விவரமாகப் பார்க்கலாம்.




நடிகர் நாகார்ஜுனா சொன்ன விஷயம் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நாகார்ஜுனா , குபேரா படத்தின் கதைக்களம் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அகில் அவர், “இந்த குபேரா படமானது கடினமான உண்மை மற்றும் நிஜங்களைப் பற்றிப் பேசுகிறது. மேலும் இப்படத்தில் ஒரு 10 ஆயிரம் கோடிகளை ஊழல் செய்யும் விஷயம் பற்றியும் இடம்பெற்றிருக்கிறது. மேலும் இப்படத்திற்காக இயக்குநர் சேகர் கம்முலாவின் கைவண்ணமும் மிகவும் அருமையாக அமைந்திருக்கிறது.
மேலும் இப்படத்திற்காக அவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பல உண்மைகள் மற்றும் நிஜமான சம்பவங்களைப் பார்த்து நானே அதிர்ச்சியானேன். மேலும் இப்படத்தில் கதைக்களம் பற்றி கூறவேண்டும் என்றால், பணக்காரன், மிடில்கிளாஸ் மற்றும் ஏழை போன்ற கதைக்களத்துடன் இருக்கும்” என்று நடிகர் நாகார்ஜுனா ஓபனாக கூறியுள்ளார்.
குபேரா ட்ரெய்லர் மற்றும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஒத்திவைப்பு :
Our crew has been pouring heart and soul into every frame of #Kuberaa. After multiple internal discussions, we’ve collectively felt that the true essence of the trailer can only be felt in the right atmosphere, with our cast, crew, and audience together ♥️
So instead of a…
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 14, 2025
நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த குபேரா படத்தின் ப்ரீ-ரிலீஸ் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 2025, ஜூன் 13ம் தேதியில் நடைபெறவிருந்தது.இந்நிலையில், சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து காரணமாகப் படக்குழு, ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியை 2025, ஜூன் 15ம் தேதிக்கு மாற்றியது.
மேலும் படத்தின் ட்ரெய்லர் 2025, ஜூன் 14ம் தேதியில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியுடன் 2025, ஜூன் 15ம் தேதியில் வெளியிடப்படும் என்று அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டிருந்தது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.