Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GV Prakash Kumar: அஜித் படத்தில் இருந்த சவால்கள்.. ஜி.வி.பிரகாஷ் குமார் சுவாரஸ்ய தகவல்

GV Prakash Kumar About Good Bad Ugly Movie : நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்காக இசையமைப்பதில் மேற்கொண்ட சவால்கள் பற்றி ஜி.வி. பிரகாஷ் குமார் ஓபனாக பேசியுள்ளார்.

GV Prakash Kumar: அஜித் படத்தில் இருந்த சவால்கள்.. ஜி.வி.பிரகாஷ் குமார் சுவாரஸ்ய தகவல்
குட் பேட் அக்லிImage Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 14 Jun 2025 07:33 AM

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தில் தமிழ் முன்னணி நாயகனாக இருந்துவரும் அஜித் குமார் (Ajith Kumar) ஹீரோவாக நடித்திருந்தார். அஜித்தின் 63வது திரைப்படமாக வெளியான இப்படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் அஜித்தின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படமாக அமைந்திருந்தது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த சூப்பர் ஹிட் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. அஜித்தின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan)  நடித்திருந்தார். மேலும் முக்கிய வேடத்தில் அர்ஜுன்தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், யோகி பாபு மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் என பல பிரபலங்கள்  நடித்திருந்தனர்.

இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகள் திரையரங்குகளில் வரவேற்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இப்படத்தின் இசை என்றே கூறலாம். அப்படி இப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar). சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார், இந்த குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைக்கும்போது நேர்ந்த சவால்கள் குறித்துப் பேசியுள்ளார். அது குறித்த விளக்கமாகப் பார்க்கலாம்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash)

குட் பேட் அக்லி படத்தில் மேற்கொண்ட சவால்கள் குறித்து ஜி.வி. பிரகாஷ் பேச்சு :

அந்த பேட்டியில் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், “நான் குட் பேட் அக்லி படத்தில் மிக பெரிய சவாலை மேற்கொண்டேன் என்று கூறலாம். ஏனென்றால் அந்த படத்தின் இசையமைப்பை நான் வெறும் 30 நாட்களில் முடித்தேன். அந்த படம் ரிலீசிற்கு 30 நாட்கள் இருக்கும்போதுதான் என்னைப் படத்திற்குள் அறிமுகம் செய்தனர். அந்த படமும் என்னிடம் முழுவதுமாக ரெடியாகி வந்தது. நான் அந்த படத்தைப் பார்த்துவிட்டு அதன், டப்பிங்கிற்கு ஏற்றது போல நானும் இசையமைக்கத் தொடங்கிவிட்டேன்.

அந்த படத்தின் இசையமைப்பை நான் வெறும் 30 நாட்களிலே முடித்தேன். அது எல்லாத்தையும் கடந்து, நான் படத்தை முழுவதுமாக பார்த்தேன், நான் யோசித்தது என்னவென்றால் இப்படத்தின் இசை தியேட்டரில் ஒர்க் ஆகவேண்டும் என்பதுதான். மற்றபடி நான் வேறு எதையும் யோசிக்கவில்லை, திரையரங்குகளில் இந்த இசை வரும்போது அஜித்தின் ரசிகர்கள் நிச்சயமாக கைதட்டவேண்டும் என்றுதான் நான் யோசித்தேன். அதற்கு ஏற்றார் போலத்தான் ‘GBU’ பாடல் போன்றவற்றை நான் இசையமைத்தேன்” என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசியுள்ளார்.

சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்...
”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” - திருமாவளவன்..
”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” - திருமாவளவன்.....
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் - Air India
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் - Air India...
போன் எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியுமா?
போன் எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியுமா?...