Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GV Prakash Kumar : நானும் வெற்றிமாறன் சேர்ந்தாலே அது நிச்சயம்.. ‘வாடிவாசல்’ படம் குறித்து ஜிவி பிரகாஷ் பேச்சு!

GV Prakash About Music Composition Of Vadivaasal : இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் மற்றும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் நடந்துவரும் நிலையில், இப்படத்தின் இசையமைப்பு குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் அப்டேட் கொடுத்துள்ளார்.

GV Prakash Kumar : நானும் வெற்றிமாறன் சேர்ந்தாலே அது நிச்சயம்.. ‘வாடிவாசல்’ படம் குறித்து ஜிவி பிரகாஷ் பேச்சு!
ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் வெற்றிமாறன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Jun 2025 22:13 PM

கோலிவுட் சினிமாவையும் கடந்து பான் இந்திய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம்தான் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியானது. இந்த படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியுடன் (RJ Balaji)  சூர்யா45 படத்தில் இணைந்து நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா46 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 2025, ஜூன் 9ம் தேதி முதல்தான் தொடங்கியது. இந்த படத்திற்கு முன்னே இயக்குநர் வெற்றிமாறனுடன், (Vetrimaaran) சூர்யா ஒப்பந்தமான படம்தான் வாடிவாசல் (Vaadivaasal).

இந்த படத்தின் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2021ம் ஆண்டிலே வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஹூட்டிங் தள்ளிக்கொண்டே போன நிலையில், நிச்சயமாக இந்த 2026ம் ஆண்டு ஷூட்டிங் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான்  (G.V. Prakash Kumar) இசையமைத்து வருகிறார். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், இப்படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்தது குறித்தும், இப்படத்தின் பாடல்கள் குறித்தும் பேசியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

வாடிவாசல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

வாடிவாசல் படத்தை பற்றி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஜி.வி. பிரகாஷிடன் வாடிவாசல் படத்தின் இசையமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜி.வி. பிரகாஷ், “எனக்கு மியூஸிக்கில் குரல்களை வைத்து பின்னணி இசை பண்ணவேண்டும் என்பதுதான் ஆசை. நான் சமீபத்தில் விக்ரமின் தங்கலான் படத்தில் குரலை வைத்து ஒரு பின்னணி இசை பண்ணியிருக்கிறேன், அதை போல இந்த வாடிவாசல் படத்தில் வேறு விதமாக மியூசிக் பண்ணலாம் என்று நினைக்கிறேன். மேலும் வெற்றிமாறனுடன் வட சென்னை படத்தில் டிரம்பெட் மியூசிக் இருக்கும், நானும் வெற்றிமாறன் இருந்தாலே அந்த மியூசிக் நிச்சயம் இருக்கும். வடசென்னை படத்தில் “அந்த பையனுக்குப் பயமில்லை” என்ற வசனம் வரும்போது பின் வரும் மியூசிக் நிச்சயமாகப் பலருக்கும் பிடித்திருக்கும்.

அதுபோல இல்லாமல் இந்த வாடிவாசல் படத்தில் குரல்களை வைத்தே ஒரு மியூசிக் பண்ணலாம் என்று ஐடியா எனக்குள் இருக்கிறது. மேலும் இப்படத்தில் நாட்டுப்புறப் பாடல்களிலே வேறு விதமாக ஒரு பாடலை வாடிவாசல் படத்திற்காக ரெக்கார்ட் பண்ணிருக்கிறோம். அதைக் கேட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவே மெய்மறந்துவிட்டார். தயாரிப்பாளர் எனக்குக் கால் பண்ணி தம்பி மிகவும் அருமையாக வந்திருக்கிறது என்று பாராட்டினார் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசியிருந்தார்.