Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gautham Vasudev Menon: ‘துருவ நட்சத்திரம்’ படம் ரிலீஸ்.. கவுதம் வாசுதேவ் மேனன் எடுத்த திடீர் முடிவு!

Gautham Vasudev Menon About Dhruva Natchathiram Release : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரின் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டிலே ரிலீசிற்கு தயாரான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் பல ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருக்கும் நிலையில், அதைப் பற்றி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார்.

Gautham Vasudev Menon: ‘துருவ நட்சத்திரம்’ படம் ரிலீஸ்.. கவுதம் வாசுதேவ் மேனன் எடுத்த திடீர் முடிவு!
கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் விக்ரம் Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 13 Jun 2025 11:21 AM

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon) இறுதியாக நடித்திருந்த திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம்  (Santhanam) இப்படத்தில் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில்தான் நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன் இறுதியாக நடித்திருந்தார். மேலும் இவரின் இயக்கத்தில் இறுதியாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து டொமினிக் அண்ட் லேடிஸ் பர்ஸ் (Dominic and Ladies Purse) என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது ஓரளவுதான் வரவேற்பைப் பெற்றது. இந்த படங்களைத் தொடர்ந்து இவரின் இயக்கத்தில் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram) . நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரிது வர்மா எனப் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படமானது கடந்த 2017ம் ஆண்டிலே ரிலீசிற்கு காத்திருந்த நிலையில், நிதி பிரச்சனையால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், “இந்த படத்தை ரிலீஸ் செய்ததற்கு பிறகுதான் மற்றப் படங்களில் ஒப்பந்தமாவேன்” என பேசியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் துருவ நட்சத்திரம் படம் பற்றி பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒற்றில் கலந்துகொண்ட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர், “இந்த துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீசிற்கு பிறகுதான், நான் மற்ற வேலைகளைத் தொடங்க முடிவு செய்திருக்கிறேன். மேலும் நான் அடுத்ததாக வேறு இப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகவில்லை, துருவ நட்சத்திரம் படத்தைப் படத்தின் தயாரிப்பாளர்களிடமே காட்டியிருக்கிறேன் அவர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது.

மேலும் இந்த படத்தில் மீது இருக்கும் சட்ட பிரச்சனைகளைத் தீர்த்து வருகிறோம், நிச்சயமாக இந்த துருவ நட்சத்திரம் படமானது வரும் 2025, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியாகும்” என்று இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இன்ஸ்டாகிராம் பதிவு :

துருவ நட்சத்திரம் திரைப்படம் :

இந்த துருவ நட்சத்திரம் படமானது கடந்த 2010ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலில் சூரியா நடிக்கவிருந்த நிலையில், சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் இப்படமானது உருவாக்கிய நிலையில், கடந்த 2017ம் ஆண்டு சில நிதி பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மேலும் இப்படம் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் வெளியாகவிருந்தது, அதுவும் சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த படத்தில் விக்ரமுடன் நடிகர்கள் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சிம்ரன் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கும் நிலையில், இந்த 2025ம் ஆண்டிற்குள் நிச்சயமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடற்பயிற்சிக்கு பிறகு இரத்த பரிசோதனை செய்யலாமா?
உடற்பயிற்சிக்கு பிறகு இரத்த பரிசோதனை செய்யலாமா?...
2025-ல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்கள்
2025-ல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்கள்...
தூக்கத்தின் போது ஏற்படும் மாரடைப்பு - எப்படி தவிர்க்கலாம்?
தூக்கத்தின் போது ஏற்படும் மாரடைப்பு - எப்படி தவிர்க்கலாம்?...
மலையாளத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
மலையாளத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்...
திடீரென துரத்திய யானை - தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள்!
திடீரென துரத்திய யானை - தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள்!...
இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?
இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?...
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்..
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்.....
 ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
 ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்...
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!...
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...