கட்சி கொடியை பயன்படுத்த தடை.. அன்புமணிக்கு எதிராக டிஜிபியிடம் மனு..
PMK Founder Ramadoss Petition At DGP: அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பயன்படுத்துவதையும் நிர்வாகிகள் சந்திப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணம் நடத்த கூடாது என எதிராக டிஜிபி இடம் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.

சென்னை, ஜூலை 24, 2025: தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்க கோரி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபி இடம் மனு அளித்துள்ளார். பாமகவின் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவு வருகிறது. கட்சி அதிகாரம் மற்றும் தலைமை பொறுப்பு யாருக்கு என இரண்டு பேரும் முட்டுக்கொடுத்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் தனித்தனியாக கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை பாமக எப்படி சந்திக்கப் போகிறது என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.
100 நாள் நடைப்பயணத் திட்டம்:
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி வருகின்ற 2025 ஜூலை 25ஆம் தேதி நடை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார். அதாவது தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க கட்சி நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளான நாளை முதல் இந்த 100 நாள் நடை பயணத் திட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.
நடைப்பயணத்திற்கு தடை விதிக்க மனு:
இந்த சூழலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அன்புமணி பயன்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பயன்படுத்துவதையும் நிர்வாகிகள் சந்திப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிராக டிஜிபி இடம் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.மேலும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: அன்புமணி நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு: டாக்டர் ராமதாஸ்!
அன்புமணியின் 100 நாள் நடை பயணம் திட்டம் 10 நோக்கங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமாக சமூக நீதிக்கான உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி நல்வாழ்வுக்கான உரிமை, மது போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்க உரிமை, நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இந்த நடைபயணம் என்பது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாளை அதாவது 2025 ஜூலை 25 அன்று திருப்போரூரில் இருந்து நடை பயணம் தொடங்க இருந்த நிலையில் டிஜிபி இடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.