Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Operation Sindoor : நமது இலக்கை எட்டியதால் தாக்குதலை நிறுத்தினோம்.. ராஜ்நாத் சிங் விளக்கம்!

Rajnath Singh's Parliament Address | பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்றும் (ஜூலை 28, 2025) நாளையும் (ஜூலை 29, 2025) தலா 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று (ஜூலை 28, 2025) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர அது குறித்து பேசியுள்ளார்.

Operation Sindoor : நமது இலக்கை எட்டியதால் தாக்குதலை நிறுத்தினோம்.. ராஜ்நாத் சிங் விளக்கம்!
ராஜ்நாத் சிங்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Jul 2025 15:47 PM

டெல்லி, ஜூலைஅ 28 : இந்திய ராணுவம் (Indian Army) தனது இலக்கை முழுமையாக எட்டியதால் தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (ஜூலை 28, 2025) மக்களவையில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து அவர் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் – 16 மணி நேர சிறப்பு விவாதம்

மக்களவையில் இன்றும் (ஜூலைஅ 28, 2025), நாளையும் (ஜூலை 29, 2025) ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து தலா 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து விவாதத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும் மே 6, 2025 மற்றும் மே 7, 2025 ஆகிய நாட்களில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

இதையும் படிங்க : PM Narendra Modi : 4,078 நாட்கள்.. இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி!

ஏர்பல் 22, 2025 அன்று பஹல்காமில் கோழைத்தனமான, மனித தனமற்ற மற்றும் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் மதத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் மொடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

நமது இல்லை எட்டியதால் தாக்குதலை நிறுத்தினோம் – ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரில் முப்படைகளுக்கும் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இலக்குகளை அவர்கள் தேர்வு செய்தனர். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் மறைமுக நடவடிக்கைகளுக்கு பதில் அளிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் முப்படைகளின் ஒற்றுமைக்கான வெற்றியாக உள்ளது. நமது நோக்கம் பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே. நமது இல்லை எட்டியதால் தாக்குதலை நிறுத்தினோம். யாருடைய அழுத்தத்தாலும் நிறுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.