Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முக்கிய பயங்கரவாதி… உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ நடவடிக்கை!

NIA : பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யூசுப் ஷா என்கிற சையத் சலாவுதீனை உபா சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாக என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அவருக்கு கைது வாரண்ட் பிறக்கப்பட்ட நிலையில், என்ஐடி உபா சட்ட குற்றவாளியாக அறிவித்துள்ளது.

முக்கிய பயங்கரவாதி… உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ நடவடிக்கை!
என்ஐஏ
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Jul 2025 07:58 AM

டெல்லி,   ஜூலை 26 : பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யூசுப் ஷா என்கிற சையத் சலாவுதீனை உபா சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாக என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்ற பதிவுகளின்படி, சையத் சலாவுதீன் உபா சட்டப்பிரிவு 13 மற்றும் 18 மற்றும் RPC இன் பிரிவு 505 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகக் கூறி ஜகுரா காவல் நிலையத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சையத் சலாவுதீனுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கைது செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்றே தனது இருப்பிடத்தை மறைத்து வைத்திருப்பதாக போலீசார் கூறினர்.

உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ நடவடிக்கை

இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் சலாவுதீனை தலைமறைவாக அறிவித்து, அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு நீதிமன்றம் ஆஜராக உத்தரவிட்டது. ஆஜராகத் தவறினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 82/83 இன் கீழ், தலைமறைவானவரின் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் உட்பட, மேலும் சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Also Read : எவ்வளவு இழப்பு என்பது முக்கியமல்ல! வெற்றிதான் முக்கியம்.. ஆபரேஷன் சித்தூர் குறித்து ஜெனரல் அனில் சவுகான் விளக்கம்!

சலாவுதீன் இருக்கும் இடம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு ஸ்ரீநகர் காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  ஸ்ரீநகரில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் கீழ் கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சையத் சலாவுதீனை நேரில் ஆஜராகுமார் என்ஐஏ தெரிவித்தது.  இந்த சூழலில், அவரை உபா சட்டத்தின் கீழ் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்துள்ளது.

சமீபத்தில், 2025 ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.  இந்த  தாக்குதல் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியது.  இந்தியா பயங்கவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது.

Also Read : ”பழி போடுவதை நிறுத்துங்க” சிந்து நிதி நீர் ஒப்பந்தம்.. பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக சாடிய இந்தியா!

இதனை அடுத்து,  பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் தாக்குதல் நடத்தியது.  இப்படியாக மூன்று நாட்கள் தாக்குதல் நீடித்த நிலையில், 2025 மே 10ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  இருப்பினும், பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.