Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

”பழி போடுவதை நிறுத்துங்க” சிந்து நிதி நீர் ஒப்பந்தம்.. பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக சாடிய இந்தியா!

Indus Water Treaty : சிந்து நிதி நீர் ஒப்பந்தம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. பயங்கரவாதத்தின் மூலம் சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது என்றும் விளக்கியது.

”பழி போடுவதை நிறுத்துங்க” சிந்து நிதி நீர் ஒப்பந்தம்.. பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக சாடிய இந்தியா!
பிரதமர் மோடி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Jun 2025 10:45 AM

டெல்லி,   ஜூன் 01 : பயங்கரவாதத்தின் மூலம் சிந்து நிதி நீர் (Indus water treaty) ஒப்பந்தத்தை பாகிஸ்தான் (pakistan india conflict) மீறியுள்ளதாக இந்தியா குற்றச்சாட்டியுள்ளது. அதோடு, சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான், இந்தியா மீது பழி சுமுத்துவதைத் நிறுத்த வேண்டும் என்று கடுமையா இந்தியா கூறியுள்ளது. தஜிகிஸ்தானின் துஷான்பேயில் பனிப்பாறைகள் குறித்த ஐ.நா. மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீரித்தி வர்தன் சிங் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் பாகிஸ்தானை அவர் கடுமையாக சாடியுள்ளார். சிந்து நிதி நீர் ஒப்பந்தம் குறித்து ஐ.நா. மாநாட்டில் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீரித்தி வர்தன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

”பழி போடுவதை நிறுத்துங்க”

அவர் பேசுகையில், “ஐ.நா அரங்கை தவறாக பயன்படுத்துவதற்கும், அரங்கிற்குள் வராத பிரச்னைகளை குறித்து தேவையிற்ற பேச்சுகளை கொண்டுவருவதற்கும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை கண்டு நாங்கள் வியப்படைகிறோம். அத்தகைய முயற்சியை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து சூழ்நிலைகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஒப்பந்தத்தின் கடமைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது. பாகிஸதான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது. ஒப்பந்தத்தை மீறியதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

பாகிஸ்தான் பிரதமரை சாடிய இந்தியா


முன்னதாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் மோடி ஷெபாஷ் ஷெரீப், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோதமான முடிவு. இது மிகவும் வருந்தத்தக்கது” என பேசியிருந்தார்.  இதற்கு முன்னதாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்தும், வர்த்தகம் குறித்தும பேச்சுவார்த்தை  நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அதற்கு இந்தியா மறுத்துள்ளது. அதோடு பேச்சுவார்த்தை என்றால்  பயங்கரவாதம் குறித்தும்,  காஷ்மீர் பிரச்னை குறித்தும் தான் என்று இந்தியா திட்டவட்டமாக கூறியது. பிரதமர் மோடி இதை உறுதிபப்பட தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான், பாகிஸ்தானை  இந்தியா மீண்டும் கடுமையாக சாடியுள்ளது.

பஹல்காம் தாக்குதல்

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு  பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், பாகிஸ்தானுக்கு  முக்கிய பங்கு இருப்பதாக  இந்தியா குற்றச்சாட்டியது.  இதனால், பாகிஸ்தான் மீது கடுமையாக நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதாவது, வர்த்தகம் மற்றும் சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.