Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Operation Sindoor

Operation Sindoor

உலக நாடுகளிடையே போர் என்பது காலம் காலமாக பல்வேறு பிரச்னைகளுக்காக நடந்து வருகிறது. அதில் தவிர்க்க முடியாதது இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் தாக்குதல்களாகும். சுதந்திரத்துக்கு முன் இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. அன்று தொடங்கி 1947 முதல் 2025 வரை பல்வேறு காலக்கட்டங்களில் இருநாட்டுக்கும் இடையே போரானது நடைபெற்றுள்ளது. இருநாடுகளாக பிரிந்த பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததில் பாகிஸ்தானுக்கு துளியும் விருப்பமில்லாமல் இருந்தது. இதனால் ஏற்பட்ட பகை உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் உருவாக காரணமாக அமைந்தது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர், 2016ல் நடந்த உரி தாக்குதல், 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதல் என அடுத்தடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

Read More

Asia Cup 2025: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? கேள்வி எழுப்பிய நிருபர்.. செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு!

India-Pakistan Match: 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. பிசிசிஐ செய்தியாளர் சந்திப்பில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்த கேள்வி எழுந்தபோது, ஊடக மேலாளர் தலையிட்டு சர்ச்சைக்கு வித்திட்டார். முன்னாள் வீரர்கள் பலர் இந்தப் போட்டியை புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

Rahul Gandhi : 22 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல் காந்தி.. ஏன் தெரியுமா?

Rahul Gandhi Adopt 22 Childrens : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். குழந்தைகளின் கல்விச் செலவையும் ராகுல் ஏற்று உள்ளார். இதற்கான முதற்கட்ட தொகை 2025 ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘டிரம்ப் பொய்யர் என நாடாளுமன்றத்தில் கூறுவீர்களா?’ மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி!

Rahul Gandhi On Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்போது, 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருடன் ஆபரேஷன் சிந்தூரை ஒப்பிட்டு மத்திய அரசு தவறு செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். அதோடு, நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி கூறுவாரா எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

‘பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமித் ஷா விளக்கம்

Amit Shah On Operation Sindoor : நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமித் ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், அவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

Operation Sindoor: பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி.. இந்திய இராணுவம் பலம் குறித்து பேசிய பிரதமர் மோடி!

PM Modi Honors Chola Dynasty: பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் 1000வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, சோழர்களின் சிறப்பான ஆட்சி, இராஜதந்திரம், வர்த்தக உறவுகள், மற்றும் ஆபரேஷன் சிந்தூர், அன்பே சிவம், உலக வன்முறை போன்றவற்றைப் பற்றி பேசினார்.

நாளை கூடும் நாடாளுமன்றம்.. எதிர்க்கட்சிகளின் திட்டம் இதுதான்.. மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

Parliament Winter Session : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2025 ஜூலை 21ஆம் தேதியான நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயாராக இருப்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

‘பாகிஸ்தான் தாக்கியதா? ஒரு போட்டோ காட்டுங்க’ சர்வதேச ஊடகங்களுக்கு அஜித் தோவல் சவால்!

Ajith Dhoval On Operation Sindoor : சென்னையில் ஐஐடியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக, வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் சவால் விடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானால் இந்தியாவில் ஒரு கண்ணாடியைக் கூட உடைக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

’இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த ஆபரேஷன் சிந்தூர்’ பிரதமர் மோடி பேச்சு

PM Modi On Operation Sindoor : பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் அனைவருக்கும் தெளிவாகக் காட்டியது என்றும் இந்திய ரத்தத்தைச் சிந்தும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

PM Modi Meets All-Party Delegation: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. அனைத்து கட்சி குழுக்களை நேரில் சந்தித்த பிரதமர் மோடி!

Operation Sindoor: பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளித்த அனைத்துக் கட்சிக் குழு உறுப்பினர்களை சந்தித்தார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைத்த குழுவின் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தீவிரமான போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

BrahMos Missile : அடித்து தூக்கிய பிரம்மோஸ்.. குழப்பத்தில் சீனா – பாகிஸ்தான் உறவு!

China Air Defense Weakness : இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான்-சீனா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் துல்லியத் தாக்குதலால், சீனாவின் HQ-9B மற்றும் HQ-16 வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்து பாகிஸ்தான் பல கேள்வி எழுப்பியுள்ளது.

CDS Anil Chauhan: எவ்வளவு இழப்பு என்பது முக்கியமல்ல! வெற்றிதான் முக்கியம்.. ஆபரேஷன் சித்தூர் குறித்து ஜெனரல் அனில் சவுகான் விளக்கம்!

Operation Sindoor: ஜெனரல் அனில் சவுகான் புனே பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், சிந்தூர் ஆபரேஷனின் வெற்றி குறித்து விளக்கினார். 48 மணி நேர போரை 8 மணி நேரத்தில் முடித்ததாகவும், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததாகவும் தெரிவித்தார். இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கையும், போர் வெறும் தாக்குதல் மட்டுமல்ல, அரசியலின் ஒரு அங்கம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் குழு.. எம்.பிக்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?

Operation Sindoor All Party delegation Meet PM Modi : ஆபரேஷன் சிந்தூர் எம்.பிக்கள் குழுவை பிரதமர் மோடி 2025 ஜூன் 9,10ஆம் தேதிகளில் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. 7 எம்.பிக்கள் கொண்ட குழு ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாத தாக்குதல் குறித்து விவரிக்க உலக நாடுகளுக்கு சென்ற நிலையில், இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்ப உள்ளனர்.

”பழி போடுவதை நிறுத்துங்க” சிந்து நிதி நீர் ஒப்பந்தம்.. பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக சாடிய இந்தியா!

Indus Water Treaty : சிந்து நிதி நீர் ஒப்பந்தம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. பயங்கரவாதத்தின் மூலம் சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது என்றும் விளக்கியது.

CDS Chauhan on Operation Sindoor: 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? உண்மையை உடைத்த தளபதி ஜெனரல் அனில் சவுகான்!

India-Pakistan Conflict: இந்திய பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானின் விமானத் தளங்களைத் தாக்கியது, துல்லியமான தாக்குதல்கள், ஆரம்பகால இழப்புகள் மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாய மாற்றங்கள் பற்றி விளக்கியுள்ளார். அணு ஆயுத பயன்பாட்டின் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், மே 7, 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் இந்தியா பெருமளவில் பதிலடி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அனுதாபம் காட்டிய கொலம்பியா – சசி தரூர் அதிர்ச்சி

India's Colombia Trip: இந்தியா, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்திற்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது. சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியாவில் நடத்திய பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானியர்களுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பிய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளித்தது.