AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BrahMos Missile : அடித்து தூக்கிய பிரம்மோஸ்.. குழப்பத்தில் சீனா – பாகிஸ்தான் உறவு!

China Air Defense Weakness : இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான்-சீனா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் துல்லியத் தாக்குதலால், சீனாவின் HQ-9B மற்றும் HQ-16 வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்து பாகிஸ்தான் பல கேள்வி எழுப்பியுள்ளது.

BrahMos Missile : அடித்து தூக்கிய பிரம்மோஸ்.. குழப்பத்தில் சீனா – பாகிஸ்தான் உறவு!
பிரம்மோஸ் ஏவுகணை
C Murugadoss
C Murugadoss | Updated On: 07 Jun 2025 09:09 AM IST

சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தான் – சீனா இடையே ஒரு பிளவை உண்டு செய்துள்ளது. அதற்கு காரணம் ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா பயன்படுத்திய பிரம்மோஸ் ஏவுகணைதான். சீனாவை தளமாகக் கொண்ட அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளான HQ-9B மற்றும் HQ-16 ஆகியவற்றின் செயல்திறன் குறித்து பாகிஸ்தான் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக சீன சமூக ஊடக தளங்களில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பிரம்மோஸ் போன்ற சூப்பர்சோனிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் இந்த அமைப்புகள் வடிவமைக்கப்படவில்லை என்று சீனா சமீபத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்

பயங்கரவாதத்தின் மீதான ஆபரேஷன் சிந்தூர் என்ற மிகப்பெரிய தாக்குதலின் காரணமாக இந்த சர்ச்சை முன்னுக்கு வந்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இதில், பெரும்பாலான தாக்குதல்கள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை மூலம் நடத்தப்பட்டன. இது தவிர, பிரெஞ்சு SCALP ஏவுகணைகள் மற்றும் இஸ்ரேலிய ஹரோப் ட்ரோன்கள் போன்ற நவீன ஆயுதங்களை இந்தியா பயன்படுத்தியது.

பிரம்மோஸ் குறித்து விளக்கும் வீடியோ

காலைவாரிய சீனா

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், முக்கியமாக HQ-9B (நீண்ட தூரம்) மற்றும் HQ-16 (நடுத்தர தூரம்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை, இந்தியாவின் பிரம்மோஸைக் கண்டறியவோ அல்லது இடைமறிக்கவோ முடியவில்லை. பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சுனியனில் அமைந்துள்ள சீன YLC-8E ரேடார் அமைப்பு கூட இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்த, சீன உற்பத்தியாளர்கள், மாக் 3 வேகத்தில் பறக்கும், குறைந்த உயரத்தில் இயங்கும் மற்றும் ராம்ஜெட் என்ஜின்களில் இயங்கும் பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள் தங்கள் அமைப்புகளின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என்று தெளிவுபடுத்தினர். இந்த அமைப்புகளின் திறன்கள் குறித்து சீனா முன்னர் எந்த தகவலையும் வழங்கவில்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தற்போது குற்றம் சாட்டி வருகின்றனர்

மாற்று வழியைத் தேடும் சீனா

பாகிஸ்தான் தனது பாதுகாப்பு ஆயுதங்களில் சுமார் 82% சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதால் தற்போது ஆயுதங்களின் பாதுகாப்பு திறன் குறித்து பாகிஸ்தான் சந்தேகப்பார்வையை திருப்பியுள்ளது. இது சீனாவுக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. உக்ரைன் போரில் வெற்றி பெற்ற அமெரிக்க பேட்ரியாட் அமைப்புடன் HQ-9B ஒப்பிடப்படுகிறது. அதே நேரத்தில், சீனாவின் அமைப்பு இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் இப்போது மாற்று வழிகளைப் பரிசீலித்து வருவதாகவும், சில தகவலின்படி, துருக்கியின் SİPER 1 மற்றும் SİPER 2 அமைப்புகளில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிகிறது. அவை சிறந்த ரேடார் திறன்களைக் கொண்டதாகவும் மின்னணு போருக்கு எதிராக வலுவாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

Follow Us