நாளை கூடும் நாடாளுமன்றம்.. எதிர்க்கட்சிகளின் திட்டம் இதுதான்.. மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!
Parliament Winter Session : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2025 ஜூலை 21ஆம் தேதியான நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயாராக இருப்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

டெல்லி, ஜூலை 20 : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் (Parliament Winter Session) 2025 ஜூலை 21ஆம் தேதியான நாளை தொடங்குகிறது. இக்கூட்டத்தில் முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 2025 ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 18வது மக்களவையின் 5வது கூட்டத் தொடர் 2025 ஜூலை 21ஆம் தேதியான நாளை தொடங்குகிறது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி (PM Modi) செய்தியாளர்களை சந்திப்பார். இக்கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக 2025 ஜூலை 20ஆம் தேதியான இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்திருந்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அர்ஜுன்ராம் மேக்வால், எல்.முருகன் மற்றும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும், திமுக சார்பில் டி.ஆர்.பாலுவும், அதிமுக சார்பில் தம்பிதுரையும் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னை குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.




அதில் முக்கியமாக ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்த கூற்று, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, அகமதாபாத் விமான விபத்த, தொகுதி மறுசீரமைப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
Also Read : ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. 8 மசோதாக்கல் நிறைவேற்ற திட்டம்..
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயார்
#WATCH | After the all-party meeting, Parliamentary Affairs Minister Kiren Rijiju says, “This is a very good opinion. The all-party delegations to different parties in the aftermath of Operation Sindoor had gone down very well, effectively and all those great experiences must be… pic.twitter.com/JzyhjPkULT
— ANI (@ANI) July 20, 2025
இந்த நிலையில் தான், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிரண் ரிஜிஜு , “ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அவையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்ய அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்” என கூறினார். தொடர்ந்து, அவரிடம் அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்த கருத்து குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருப்பது குறித்து கேட்டபோது, ”அரசு அனைத்து கேள்விகளுக்கும் வெளியே அல்ல, நாடாளுமன்றத்திற்குள்தான் பதிலளிக்கும்.
நாடாளுமன்றக் கூட்டத்தின் போது நாங்கள் தகுந்த முறையில் பதிலளிப்போம். முக்கியமான விஷயங்கள் எழும்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் நாடாளுமன்றத்தில் இருப்பார். விதிகள் மற்றும் நாடாளுமன்ற மரபுகளை நாங்கள் மதிக்கிறோம். நாம் வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் நாடாளுமன்றம் முறையாக நடப்பதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும்” என்று கூறினார்.