Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘பாகிஸ்தான் தாக்கியதா? ஒரு போட்டோ காட்டுங்க’ சர்வதேச ஊடகங்களுக்கு அஜித் தோவல் சவால்!

Ajith Dhoval On Operation Sindoor : சென்னையில் ஐஐடியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக, வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் சவால் விடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானால் இந்தியாவில் ஒரு கண்ணாடியைக் கூட உடைக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

‘பாகிஸ்தான் தாக்கியதா? ஒரு போட்டோ காட்டுங்க’ சர்வதேச ஊடகங்களுக்கு அஜித் தோவல் சவால்!
அஜித் தோவல்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 11 Jul 2025 22:26 PM

சென்னை, ஜூலை 11 : ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கையின்போது, பாகிஸ்தானால் இந்தியாவில் ஒரு கண்ணாடியைக் கூட உடைக்க முடியவில்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval)  தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறும் வெளிநாட்டு ஊடகங்கள் சேதம் அடைந்த புகைப்படங்களை காட்ட முடியுமா என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறார். 2025 ஜூலை 11ஆம் தேதியான இன்று சென்னையில் ஐஐடியில் 62வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து அஜித் தோவல் கூறினார். அதாவது, அவர் பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கினோம்.

‘பாகிஸ்தான் தாக்கியதா? ஒரு போட்டோ காட்டுங்க’

வேறு எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தவில்லை. யார் எங்கே இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்தது. அதன்படியே, துல்லியமாக நாங்கள் தாக்குதல் நடத்தினோம். முழு நடவடிக்கையும் 23 முதல் 28 நிமிடங்களில் முடிந்தது. வெளிநாட்டு ஊடகங்கள் பல்வேறு விஷயங்களை கூறிகிறார்கள். குறிப்பாக, பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக பல செய்திகள் வெளியிட்டன. தாக்குதல் நடத்துவதாக கூறினீர்களே, அதற்காக ஒரு புகைப்படத்தை காட்டுங்கள்.

இப்போது, சேட்டிலைட் வசதிகள் உள்ளன. எனவே, ஒரே ஒரு சேட்டிலைட் போட்டோ காட்ட முடியுமா? பாகிஸ்தானால் இந்தியாவில் ஒரு கண்ணாடியைக் கூட உடைக்க முடியவில்லை. பாகிஸ்தான் விமானப்படை தளத்தை குறிவைத்து இந்திய விமானப்படை சுமார் 15 பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவியது.

Also Read : ஆபரேஷன் சிந்தூர் குழு.. எம்.பிக்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?

அஜித் தோவல் பேச்சு


2047ம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் நடவடிக்கையில் இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டியது அவசியம்” என கூறினார். ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசிய அவர், “ஏஐ ஒவ்வொரு ஆண்டும் உலகை மாற்றும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மட்டுமல்ல, இயந்திர கற்றல், பாதுகாப்பு, ரோபாட்டிக்ஸ், மருத்துவம், நிதி மற்றும் அனைத்திற்கும் ஏஐ தொழில்நுட்பம் தேவைப்படும்” என்று கூறினார்.

Also Read : 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? உண்மையை உடைத்த தளபதி ஜெனரல் அனில் சவுகான்!

2025 ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து மூன்று நாட்கள் தாக்குதல் நடந்த நிலையில், 2025 மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.