ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. 8 மசோதாக்கல் நிறைவேற்ற திட்டம்..
Monsoon session Of Parliament: தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) உள்ளிட்ட மசோதாக்கல் தாக்கல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எட்டு புதிய மசோதாக்களும், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பதற்கான ஒரு தீர்மானமும் நிகழ்ச்சி நிரலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025, ஆகஸ்ட் 21 வரை மொத்தம் 21 அமர்வுகள் நடைபெறும், 2025, ஆகஸ்ட் 12 முதல் 18 வரை இடைவேளையுடன், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் ஒருமுறை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி உட்பட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 2025, ஜூலை 21ஆம் தேதி தொடங்கி 2025, ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத எனவும் அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 8 மசோதாக்கல் தாக்கல் செய்ய திட்டம்:
இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்’ ஒரு முக்கிய அம்சமாக இருக்கக்கூடும். தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே வாக்காளர் பட்டியலைத் திருத்தும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் – அதாவது காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் – எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்தப் முயற்சி சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான வாக்கெடுப்பை உறுதி செய்யும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் இராணுவ நடவடிக்கை – ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் விவாதங்கள் மற்ரும் கேள்விகள் முன்வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய வருமான வரி மசோதா:
அதோடு புதிய வருமான வரி மசோதாவை நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் மேலும் ஆய்வுக்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் உள்ள வார்த்தைப் பிரயோகங்களை நீக்கி, சாதாரண மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில், புதிய மசோதா பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் படிக்க: வரதட்சணை கொடுமை.. கை, கால்களில் எழுதி வைத்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு.. அதிர்ச்சி சம்பவம்!
இதற்கிடையில், தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனம் (திருத்தம்) மசோதா, வரிவிதிப்புச் சட்டங்கள் (திருத்த) மசோதா, கூடுதலாக, இந்திய துறைமுக மசோதா உட்பட எட்டு மசோதாக்கள் நிலுவையில் உள்ளன, மேலும் இந்த முன்மொழியப்பட்ட சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.