22 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல் காந்தி.. ஏன் தெரியுமா?
Rahul Gandhi Adopt 22 Childrens : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். 22 குழந்தைகளின் கல்விச் செல்வதை ஏற்றும் உள்ளார். இதற்கான முதற்கட்ட தொகை 2025 ஜூலை 30ஆம் தேதியான நாளை வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி, ஜூலை 29 : பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தத்தெடுத்துள்ளார். அவர்களது கல்விச் செலவையும் அவர் ஏற்றுள்ளார். 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். அதாவது, லஷ்யர் இ தொய்வா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலில் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து, 2025 மே 9ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்பட்டது.
இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 75 பேர் காயம் அடைந்தனர். இதில், அப்பகுதியில் இருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
Also Read : ‘இந்தியாவுக்கு முழு உலகத்தின் ஆதரவு கிடைத்தது’ – ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி




22 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல் காந்தி
இதனை அடுத்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள் தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவீந்திர சர்மா குயின் தெரிவித்தார்.
Also Read : ‘பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமித் ஷா விளக்கம்
இவர் கூறுகையில், இருநாடுகளுக்கு இடையேயான தாக்குதலில் பெற்றோர் இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் கந்தி ஏற்கிறார் என தெரிவித்தார். பூஞ்சில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக நாளை (2025 ஜூலை 30) முதல் தவணை உதவி தொகை விடுவிக்கப்படும் என கூறினார். இந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு முடியும் வரை உதவிகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.