Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமித் ஷா விளக்கம்

Amit Shah On Operation Sindoor : நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமித் ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், அவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

‘பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமித் ஷா விளக்கம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Jul 2025 13:23 PM

டெல்லி, ஜூலை 29 : ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், ” ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சுலைமான், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட பிறகு, அவர்களின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்று M9, மற்ற இரண்டு AK-47கள். இந்த மூன்று துப்பாக்கிகளும் அப்பாவி பொதுமக்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டன என்பது உறுதி செய்யப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் சந்தித்தேன்.

பாதிக்கப்பட்ட பெண்களை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளை அனுப்பியவர்களை மோடி செயலிழக்கச் செய்தார். இன்று நமது பாதுகாப்புப் படையினர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கொன்றனர் என்பதை இன்று அனைத்து குடும்பங்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை என்ஐஏ கைது செய்துள்ளது. நேற்று அவர்கள் (காங்கிரஸ்) பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், அதற்கு யார் பொறுப்பு என்று எங்களிடம் கேட்டார்கள்.

Also Read : 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? உண்மையை உடைத்த தளபதி ஜெனரல் அனில் சவுகான்!

அமித் ஷா விளக்கம்


நேற்று, முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் கேள்வி எழுப்பினார். பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன? பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். ப. சிதம்பரம் நேற்று கேள்வி எழுப்பியபோது நான் வேதனையடைந்தேன்.

2025 மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டு அதிகாலை 1:04 மணி முதல் அதிகாலை 1:24 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானிய பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை.

Also Read : பாகிஸ்தானுக்கு அனுதாபம் காட்டிய கொலம்பியா – சசி தரூர் அதிர்ச்சி

சிந்தூர் நடவடிக்கையின் போது நமது பாதுகாப்புப் படையினர் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்தனர்” என அமித் ஷா கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறத்தும், பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பிய நிலையில்,  அமித் ஷா இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.