Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Jammu Kashmir

Jammu Kashmir

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணைக்க ஒப்புக் கொண்டார். அதாவது, இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாக பிரிக்கப்பட்டபோது, ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்த வந்த மன்னர் இந்து என்பதால், அவர் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க ஒப்புக் கொண்டார். அன்றில் இருந்து இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் 1952ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தனி மாநிலமாக இருந்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கம் செய்துவிட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறியது. கூடுதலாக லடாக் பிரிக்கப்பட்டு மற்றொரு யூனியன் பிரதேசமாக மாறியது. இதற்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீரின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்றன. அதே நேரத்தில், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி காஷ்மீருக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு எல்லையில் பாதுகாப்பு படைகளை குவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது

Read More

உறைபனி நிலையில் ஜம்மு காஷ்மீர்.. கடும் குளிரால் மக்கள் அவதி!

வட இந்தியா முழுவதும் பல நகரங்களில் மூடுபனி கொட்டுகிறது. மலைப்பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது. தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும் வானிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாநிலங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

பனி அலை தொடங்குது.. ஜில்லென மாறும் ஜம்மு காஷ்மீர்!

இந்தியாவில் உள்ள சுற்றுலாதலங்களில் மிக முக்கியமானது ஜம்மு காஷ்மீர். மலைகள், காடுகள், ஆறுகள் என அனைத்துவிதமான டூரிஸ்ட் இடங்களும் ஜம்முவில் உண்டு. இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீரில் பனி அலை தொடங்குகிறது. அதாவது பனிப்பொழிவின் முந்தைய கட்டமாக காற்றுடன் கூடிய பனி இருக்கிறது. இதனால் ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது

ஜம்முவில் சுற்றுலா தீவிரம்.. ஆர்வம் காட்டும் மக்கள்!

இந்தியாவில் பல சுற்றுலாதலங்கள் இருந்தாலும் ஜம்மு காஷ்மீர் என்பது மிகவும் முக்கியமான சுற்றுலாதளம். பனி, ஆறு, மலை, காடு என அனைத்துவிதமான இயற்கையும் ஜம்முவில் கூடி இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பல புது விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்களும் சுற்றுலாவுக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

பார்க்க பார்க்க அழகு.. வெண்பனி போர்த்திய மலைகள்!

இந்தியாவில் உள்ள சுற்றுலாத்தளங்களில் மிக முக்கியமான இடம் ஜம்மு காஷ்மீர். அனைத்து விதமான நிலப்பரப்புகளும் அங்கு உண்டு. குறிப்பாக பனியும் மலையும் ஜம்முவின் ஸ்பெஷல். இந்த நிலையில் இந்த சீசனில் வெண்பனி பெய்து மலைகளை போர்வையால் மூடியது போல வெண்பனி காட்சி அளிக்கிறது. இது பார்ப்பவரை உள்ளம் மகிழ செய்கிறது

தொடர் மழையால் நிலச்சரிவுகள்.. பூஞ்ச் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

தொடர் மழையால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு பிரிவின் பூஞ்ச் ​​மற்றும் ராம்பன் மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 95 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 700 குடியிருப்பாளர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்முவில் வெளுக்கும் மழை.. ஆற்றில் அதிகளவு தண்ணீர்.. திறக்கப்பட்டது சலால் அணை!

வடமாநிலங்களில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான ஆறுகளில் மழை நீரின் நிரம்பி அபாய கட்டத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றன.பல இடங்களில் ஆற்று நீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அணை திறக்கப்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீரில் சரிந்து கிடக்கும் மலை.. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு

வானிலை மாற்றம் காரணமாக வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேக வெடிப்பு காரணமாக ஒரே நேரத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் ராம்பன் பகுதியில் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது

ஜம்மு உதம்பூர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு.. பாதிக்கப்பட்ட போக்குவரத்து..!

ஜம்மு-பூஞ்ச் ​​தேசிய நெடுஞ்சாலை காளிதர் கோதர் மார்க்கில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, போக்குவரத்து சேவை சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் நீண்ட வாகனங்கள் வரிசையில் நின்றன. நிர்வாகம் ஏற்கனவே ஒரு ஜேசிபியை நெடுஞ்சாலையில் தயார் நிலையில் வைத்திருந்தது. இதைப் பயன்படுத்தி, சாலையில் விழுந்த மண் மற்றும் மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சாலையில் கிடந்த மண் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு சாலை மீட்டெடுக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் பலத்த மழை.. நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்!

Jammu Kashmir Flood : ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழையால் பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி வைஷ்ணணவி தேவி கோயில் புனித யாத்திரை வழித்தடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்.. படகுகள் மூலம் மக்களை மீட்ட SDRF!

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக பலவேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில், இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தின் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த மக்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மீட்டனர். ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது, சாலை இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, சிஐஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு.. புதைந்த வீடுகள்.. 4 பேர் உயிரிழப்பு

Jammu Kashmir Cloud Burst : ஜம்மு காஷ்மீர் கதுவா பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Rahul Gandhi : 22 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல் காந்தி.. ஏன் தெரியுமா?

Rahul Gandhi Adopt 22 Childrens : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். குழந்தைகளின் கல்விச் செலவையும் ராகுல் ஏற்று உள்ளார். இதற்கான முதற்கட்ட தொகை 2025 ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆபரேஷன் மகாதேவ்..! பஹல்காம் பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற இந்திய ராணுவம்!

ஸ்ரீநகரின் லிட்வாஸ் பகுதியில் மறைந்திருந்த 3 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் இன்று அதாவது 2026 ஜூலை 28ம் தேதி ஆபரேஷன் மகாதேவ் என்ற திட்டத்தின் கீழ் கொன்றது. பஹல்காம் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான ஹாஷிம் மூசாவும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகளை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இருப்பினும், மீதமுள்ள இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் 2024 சோனமார்க் சுரங்கப்பாதை திட்டத்தின் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் செனாப் நதியில் திடீரென உயர்ந்த நீர்மட்டம்.. பொதுமக்கள் செல்ல தடை விதிப்பு..!

செனாப் நதியில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தடைசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றத் தவறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். செனாப் நதி இன்னும் அபாய அளவை எட்டவில்லை என்றாலும், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் நீர்மட்டம் 2 முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதல்.. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது.. என்ஐஏ தீவிர விசாரணை!

Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான இருவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு, தேவையான உதவிகளை செய்ததாகவும் என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர்.