AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Interim Budget 2026 Speech Highlights: : இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. முழு விவரங்கள் இதோ!

Tamil Nadu Interim Budget 2026-27 : 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்கால பட்ஜெட் (Interim Budget) இன்று தாக்கல் சட்டப்பேரவையில் செய்யப்படுகிறது. தங்கம் தென்னரசு 2 மணி நேரம் கடந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். அடுத்து வேளாணுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

C Murugadoss
C Murugadoss | Updated On: 17 Feb 2026 14:36 PM IST
Share
Tamil Nadu Interim Budget 2026 Speech Highlights: : இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடு பட்ஜெட்

Tamil Nadu Interim Budget Speech 2026 Updates: ஒவ்வொரு ஆண்டின் முதல் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதேபோல இந்த இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆனால் அவரது பேச்சு எதுவும் அவைக்குறிப்பில் பதிவாகவில்லை. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜன.22, 23ல் எம்எல்ஏக்கள் விவாதித்தனர். அவர்களின் விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24ல் பதிலளித்துப் பேசினார். பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் இடைக்கால பட்ஜெட் தினமாக இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது, தமிழக அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று சமர்பிக்கப்படும். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தல் காலம் என்பதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 17 Feb 2026 01:14 PM (IST)

    தமிழ்நாடே போராட்டக்களமாக மாறியுள்ளது – எடப்பாடி பழனிசாமி

    திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றததால் தமிழ்நாடே போராட்டக்களமாக மாறியுள்ளது – எடப்பாடி பழனிசாமி

  • 17 Feb 2026 01:11 PM (IST)

    வாட்டி வதைத்த திமுக கடைசி பட்ஜெட்

    5 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டி வதைத்த திமுக கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது –  எடப்பாடி பழனிசாமி

  • 17 Feb 2026 01:09 PM (IST)

    வட்டி மானியம் ரூ.3002 கோடி

    பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3002 கோடி வழங்கப்பட்டுள்ளது.

  • 17 Feb 2026 12:57 PM (IST)

    ரூ.229 கோடியில் எண்ணெய்வித்துப் பயிர்

    14 இலட்சம் ஏக்கரில் ரூ.229 கோடியில் எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடி ஊக்குவிப்பு 7.54 இலட்சம் விவசாயிகள் பயன் –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

  • 17 Feb 2026 12:52 PM (IST)

    ரூ. 174 கோடியில் பயறு பெருக்குத் திட்டம்

    24 இலட்சம் ஏக்கரில் ரூ. 174 கோடியில் பயறு பெருக்குத் திட்டம் மூலம் 9.44 இலட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்- வேளாண் அமைச்சர்.

  • 17 Feb 2026 12:41 PM (IST)

    பனையில் குட்டை ரகம்

    பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது-  வேளாண் அமைச்சர்

  • 17 Feb 2026 12:41 PM (IST)

    Tamil Nadu Budget 2026 : ரூ.3065 கோடி நிதி ஒதுக்கீடு

    வேளாண் கல்வி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.3065 கோடி நிதி ஒதுக்கீடு – வேளாண் அமைச்சர்

  • 17 Feb 2026 12:37 PM (IST)

    நெல் ஜெயராமன் பெயரில் நெல் ரக பாதுகாப்பு

    நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் இவை, 70ஆயிரம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன – வேளாண் பட்ஜெட்டில் தகவல்

  • 17 Feb 2026 12:30 PM (IST)

    Tamil Nadu Interim Budget : 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன

    அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது – வேளாண்துறை அமைச்சர்

  • 17 Feb 2026 12:26 PM (IST)

    நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்

    நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது- வேளாண் அமைச்சர்

  • 17 Feb 2026 12:23 PM (IST)

    வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம்

    496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன” – வேளாண் பட்ஜெட்டில் தகவல்

  • 17 Feb 2026 12:22 PM (IST)

    1 லட்சம் ஏக்கரில் சாகுபடி

    தக்காளி, வெண்டை, கத்தரியை 1 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது – வேளாண் அமைச்சர்

  • 17 Feb 2026 12:20 PM (IST)

    2 லட்சம் இலவச மின்சார இணைப்புகள்

    2 லட்சம் இலவச மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 5000 புதிய பம்பு செட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன – வேளாண் அமைச்சர்

  • 17 Feb 2026 12:17 PM (IST)

    சாகுபடி ஏக்கர் பரப்பு அதிகரிப்பு

    மக்கா சோளம் சாகுபடி 12 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு. கம்பு சாகுபடி 1.18 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு –  அமைச்சர் பன்னீர்செல்வம்

  • 17 Feb 2026 12:13 PM (IST)

    53 லட்சம் தென்னங்கன்றுகள்

    53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் பன்னீர்செல்வம்

  • 17 Feb 2026 12:11 PM (IST)

    வேளாண் துறையில் தொழில் முனைவோராக்க மானியம்

    இளைஞர்களை வேளாண் துறையில் தொழில் முனைவோராக்க மானியம் வழங்கப்படுகிறது – அமைச்சர்

  • 17 Feb 2026 12:05 PM (IST)

    உணவு உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு

    உணவு உற்பத்தியை அதிகரிப்பதே தமிழக அரசின் இலக்கு –  வேளாண் அமைச்சர்

  • 17 Feb 2026 11:57 AM (IST)

    வேளாண் துறைக்கான பட்ஜெட்

    வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

  • 17 Feb 2026 11:53 AM (IST)

    நெருக்கடியை ஒன்றிய அரசு கொடுக்கிறது

    தமிழ்நாட்டுக்கு செயற்கையான நெருக்கடியை ஒன்றிய அரசு கொடுத்து வருகிறது” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:50 AM (IST)

    Tamil Nadu Interim Budget : வரிப்பங்கு குறைப்பால் ரூ. 1202 கோடி இழப்பு

    மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறது.  வரிப்பங்கு குறைப்பால் ரூ. 1202 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது – நிதியமைச்சர்

  • 17 Feb 2026 11:41 AM (IST)

    Tamil Nadu Interim Budget : 35.33 இலட்சம் பயனாளிகள்

    அனைத்துச் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களில் 35.33 இலட்சம் பயனாளிகள் பலன். மொத்தமாக ரூ.5,463 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்

  • 17 Feb 2026 11:34 AM (IST)

    எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு

    தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்… எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு… முழு விவரம் இதோ

  • 17 Feb 2026 11:31 AM (IST)

    ரூ.281 கோடியில் தீயணைப்பு வாகனங்கள்

    5 ஆண்டுகளில் ரூ.281 கோடியில் தீயணைப்பு வாகனங்கள் & பாதுகாப்புக் கருவிகள். 37 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் – நிதியமைச்சர்

  • 17 Feb 2026 11:24 AM (IST)

    மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி

    நாட்டிலேயே முதலிடமாக மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்பு – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:21 AM (IST)

    30.79 கோடி சுற்றுலா பயணிகள்

    “சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:14 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : நலிவுற்ற மக்களுக்கு 58,211 வீடுகள்

    நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்:  பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 58,211 வீடுகள் கட்டப்பட்டுள்ளன 53,227 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன – நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு

  • 17 Feb 2026 11:11 AM (IST)

    10 புதிய கைத்தறிப் பூங்காக்கள் – தங்கம் தென்னரசு

    கைத்தறி & துணிநூல்: ரூ. 20 கோடியில் 10 புதிய கைத்தறிப் பூங்காக்கள் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:04 AM (IST)

    5 ஆண்டுகளில் 38 புதிய கலை & அறிவியல் கல்லூரி

    தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் 38 புதிய கலை & அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 11:02 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு

    5 ஆண்டுகளில் 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:59 AM (IST)

    மகளிர் விடியல் பேருந்து பயணம் அறிவிப்பு

    மகளிர் விடியல் பேருந்து பயணம்..ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… தங்கம் தென்னரசின் தங்கமான அறிவிப்பு  

  • 17 Feb 2026 10:56 AM (IST)

    எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி

    மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:53 AM (IST)

    போக்குவரத்துத்துறை நிதி

    போக்குவரத்துத்துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:52 AM (IST)

    Tamil Nadu Interim Budget : கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில்

    கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:41 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா

    ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:32 AM (IST)

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:24 AM (IST)

    Tamil Nadu Interim Budget : 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்

    புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:19 AM (IST)

    Tamil Nadu Interim Budget : விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

    “இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு” -அமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:13 AM (IST)

    Tamil Nadu Interim Budget : பெண்களுக்கான திட்டங்கள் இவை

    விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:12 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : இதுவரை முக்கிய தகவல்கள்

    19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்

    மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய இந்த அரசு மானியம் வழங்குகிறது.

    தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:11 AM (IST)

    41% பெண்கள் தமிழ்நாட்டில்!

    தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 41% பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர்” -அமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:07 AM (IST)

    Tamil Nadu Interim Budget : 6.7 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்

    10 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டத்தில் 6.7 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது

  • 17 Feb 2026 10:06 AM (IST)

    ⁠Thangam Thennarasu TN Budget Speech : உயர்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி

    உயர்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது –  தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 10:02 AM (IST)

    Tamil Nadu Interim Budget : ரூ.5463 கோடி ஒதுக்கீடு.. விவரம்!

    சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்துக்காக ரூ.5463 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • 17 Feb 2026 10:00 AM (IST)

    Tamil Nadu Budget : மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய்

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:55 AM (IST)

    காலை உணவுத்திட்டம் – அமைச்சர் புகழாரம்

    காலை உணவுத்திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:49 AM (IST)

    ⁠Tamil Nadu Interim Budget : ஒரே நாளில் ரூ. 6500 கோடி நிதி

    எதிர்கால வரும் தடைகளை நிறை நேரத்தில் கணித்து மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. வங்கி கணக்கில் ஒரே நாளில் ரூ. 6500 கோடி நிதி விடுவிக்கப்பட்டது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:45 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : 285 கோடி ரூபாயில் அருங்காட்சியங்கள்

    தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், சென்னையில் 285 கோடி ரூபாயில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ 10 கோடியில் அழகர் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:42 AM (IST)

    Thangam Thennarasu TN Budget Speech : இரும்பு பிரித்தெடுப்பு தமிழ்நாட்டில் தான் தோன்றியது

    தமிழ்நாட்டு கலையை வெளிநாட்டில் பரப்ப முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன இரும்பு தாதுவிலிருந்து இரும்பு பிரித்தெடுப்பு தமிழ்நாட்டில் தான் தோன்றியது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:39 AM (IST)

    தமிழ் மொழிக்கான சேவைகள்

    அம்பேத்கரின் படைப்புகள் எளிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெறுகிறது – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:37 AM (IST)

    தமிழ்நாட்டை பின்பற்றும் பிற மாநிலங்கள்

    தமிழ்நாட்டின் நலத்திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. நாட்டிற்கே வழிகாட்டும் பொறுப்புணர்வுடன் தமிழக முதல்வர் திகழ்கிறார் – தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:35 AM (IST)

    Tamil Nadu Budget 2026 : 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம்

    நாட்டின் 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது –  தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:32 AM (IST)

    Tamil Nadu Budget 2026 : இடைக்கால பட்ஜெட் தாக்கல்

    இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 17 Feb 2026 09:23 AM (IST)

    Tamil Nadu Interim Budget: சட்டப்பேரவையில் காதுகுத்து விழா

    இடைக்கால பட்ஜெட் நடக்கவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் காது குத்து விழா நடைபெறவுள்ளதாக அழைப்பிதழ் வெளியிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

  • 17 Feb 2026 09:05 AM (IST)

    அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்

    Tamil Nadu Interim Budget: இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

  • 17 Feb 2026 08:50 AM (IST)

    பிப்ரவரி 23ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

    இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும் வகையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது

  • 17 Feb 2026 08:35 AM (IST)

    புதிய அறிவிப்புகள் வருமா?

    Tamil Nadu Interim Budget: இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, தேர்தல் காரணமாக மகளிர் உரிமைத் தொகை ஒரே சமயத்தில் ரூ.5,000ஆக வரவு வைக்கப்பட்டது. அதோடு, திமுக மீண்டும் ஆட்சியை தொடரும்போது ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 17 Feb 2026 08:20 AM (IST)

    முக்கிய அறிவிப்புகள் வர வாய்ப்பு

    சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரவுள்​ள​தால், இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமல்லாதது, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்​களைக் கவரும் வகையிலும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெறு​வதற்கு வாய்ப்​புள்​ளதாக கூறப்படுகிறது

  • 17 Feb 2026 08:10 AM (IST)

    இடைக்கால பட்ஜெட்டை புகழும் அமைச்சர்கள்

    Tamil Nadu Interim Budget: பொதுமக்கள் எதிர்பார்க்கும் வகையில் இடைக்கால பட்ஜெட் இருக்கும் என தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இதேபோல, எதிர்க் கட்சிகள் அரண்டு போகும் அளவுக்கு இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் தெரிவித்திருந்தார்.

  • 17 Feb 2026 07:57 AM (IST)

    Tamil Nadu Interim Budget: மக்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட்

    Tamil Nadu Interim Budget 2026: இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்பதால் மக்கள் இந்த பட்ஜெட்டை எதிர்பார்க்கின்றனர்.

  • 17 Feb 2026 07:55 AM (IST)

    ஆய்வு செய்த அமைச்சர்

    பட்ஜெட் என்பதால் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு சட்டப்பேரவையை நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கைகள், மேஜைகள், அவர்கள் பேசும் மைக்குகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

  • 17 Feb 2026 07:54 AM (IST)

    இடைக்கால பட்ஜெட் இன்று

    Tamil Nadu Interim Budget 2026: இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9:30 மணி அளவில் தாக்கல் செய்ய உள்ளார்.

Published On - Feb 17,2026 7:51 AM

Follow Us