Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜம்மு காஷ்மீரில் பலத்த மழை.. நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்!

Jammu Kashmir Flood : ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழையால் பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி வைஷ்ணணவி தேவி கோயில் புனித யாத்திரை வழித்தடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பலத்த மழை.. நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்!
காஷ்மீரில் நிலச்சரிவுImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Aug 2025 10:14 AM

ஜம்மு காஷ்மீர், ஆகஸ்ட் 27 :  ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் (Jammy Kashmir Landslide) சிக்கி 31 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைஷ்ணவி தேவி கோயில் புனித யாத்திரையின்போது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 31 பேர் உயிரிழந்த நிலையில், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  வடமாநிலங்களில் சில வாரங்களாகவே  பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், உத்தரகாண்டில்  கனமழை பெய்து வருகிறது. இதனால், அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.  குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலையங்களில் தண்ணீர் நிரம்பி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. காஷ்மீரில் 3,500க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, துணைப் பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களின் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : ஜம்மு காஷ்மீரில் கனமழை … நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழப்பு

 ஜம்மு மற்றும் சம்பாவில் 20 முதல் 30 தாழ்வான பகுதிகள் மற்றும் பல பகுதிகள் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனஜம்மு நகரம், ஆர்.எஸ். புரா, சம்பா, அக்னூர், நக்ரோட்டா, கோட் பல்வால், பிஷ்னா, விஜய்பூர், புர்மண்டல் மற்றும் கதுவா மற்றும் உதம்பூரின் சில பகுதிகள் ஆகியவை நிலச்சரிவு, வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி


தொடர் மழையால் செல்போன் டவர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர் முழுவதும் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ரியாசி, ராம்பன், தோடா, பில்லாவர், கத்ரா, ராம்நகர், ஹிராநகர், கூல், பனிஹால் மற்றும் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களின் அருகிலுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, மோசமான வானிலை காரணமாக பல விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Also Read : ஜம்முவில் கனமழை.. பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் வெள்ள எச்சரிக்கை விடுத்த இந்தியா..!

இதற்கிடையில், பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவை கிடைக்க உறுதி அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழையால் ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வைஷ்ணணவி தேவி கோயில் புனித யாத்திரை வழித்தடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.