நடுவழியிலேயே சிக்கிய மோனோ ரயில்.. 100 பயணிகளின் கதி என்ன? மும்பையில் நடந்த சம்பவம்
Mumbai Mono Rail Stuck : மகாராஷ்ரா மாநிலம் மும்பையில் நடுவழியிலேயே மோனா ரயில் சிக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின்சார பாதிப்பால் மோனோ ரயில் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த ரயிலில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

மும்பை, ஆகஸ்ட் 19 : மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கனமழை (Mumbai Rains) வெள்ளத்தால் தத்தளிக்கும் நிலையில், ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, மும்பை நடுவழியிலேயே மோனோ ரயில் (Mumbai Mono Rail) நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்குள்ளே சிக்கிக் கொண்டனர். ரயில் கதவுகள் மூடப்பட்டிருப்பதாலும், ஏசி வேலை செய்யாமல் இருப்பதால் பயணிகள் மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மின்சார பிரச்னையால் மோனோ ரயில் நடுவழியிலேயே நின்றதாக மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ரயில் நின்றதால், பயணிகளை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மும்பையில் தொடரந்து மழை வெளுத்து வாங்கி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.




மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 300 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த நகரமே ஸ்தம்பித்துப் போனது. பால்கர், தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மும்பையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் புறப்பட வேண்டிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மும்பை நகரின் பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் முடப்பட்டுள்ளன. மேலும் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Also Read : மும்பையில் 4வது நாளாக கனமழை – ரயில், விமான சேவைகள் பாதிப்பு
நடுவழியிலேயே சிக்கிக் கொண்ட மோனா ரயில்
#WATCH | Mumbai: A Monorail train near Mysore Colony station experienced a power supply issue. Efforts to rescue the passengers underway. pic.twitter.com/V2Sqwyvmu5
— ANI (@ANI) August 19, 2025
இப்படியான சூழலில், மும்பையில் மைசூர் காலனி மோனா ரயில் சிக்கிக் கொண்டது. செம்பூருக்கும் பக்தி பூங்காவிற்கும் இடையில் மாலை 6.15 மணியளவில் நடுவழியிலேயே ரயில் நின்றது. இதனால், பயணிகள் அச்சமடைந்தனர். இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்பு குழுவினர் விரைந்தனர். தீயணைப்பு படை அதிகாரிகள் மீட்புப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, பயணிகள் பயத்தில் ஜன்னல்களை உடைக்க முயன்றனர். ஏசி இல்லாததால் பயணிகள் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால், ஜன்னலை உடைக்க பயணிகள் முயற்சித்தனர்.
100க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்குள் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, மீட்பு பணிகள் தீவிரம் நடந்தது. பெரிய வாகனங்களில் ஏணிகள் அமைத்து ஒவ்வொரு பயணிகளை மீட்டனர். கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக ரயிலுக்குள் சிக்கி தவித்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Also Read : இளைஞருடன் வாழ கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி.. 53 வயது நபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!
இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். இதுகுறித்து மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் கூறுகையில், மோனோரயிலின் கொள்ளளவு 109 மெட்ரிக் டன். ஆனால் இந்த ரயிலில் அதிகப்படியான பயணிகள் இருந்துள்ளனர். இதற்கிடையில், மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால், ரயில் நடுவழியிலேயே நின்றது” எனக் கூறியது.