இளைஞருடன் வாழ கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி.. 53 வயது நபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!
Wife Killed Husband in Bengaluru | பெங்களூருவில் உறவினர் இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் அதற்கு தடையாக இருந்த தனது கணவரை, கள்ளக்காதளன் உதவியுடன் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் 4 பேர் தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு, ஆகஸ்ட் 19 : கர்நாடகாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சுப்ரமணியா என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக சுப்ரமணியா கொலை செய்யப்பட்டதும், அதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக சுப்ரமணியா கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கள்ளத்தொடர்பு காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்
கர்நாடகா மாநிலம், சிக்மங்களூரு மாவட்டத்தை சேர்ந்த கடூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியா. 53 வயதான இவர் தையல்காரராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை மர்ம கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சுப்ரமணியாவின் கொலைக்கு அவரது உறவினரான பிரதீர் என்ற நபரும் சுப்ரமணியாவின் மனைவியும் தான் முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : காதலனுடன் வாழ கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி.. உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த கொடூரம்!




திட்டம் தீட்டி கணவனை கொலை செய்த மனைவி
சுப்ரமணியா புதியதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு ஆசாரி வேலைக்காக சுப்ரமணியாவின் உறவினரான பிரதீப் என்ற 33 வயது நபர் வந்துள்ளார். அவருடன் சுப்ரமணியாவின் மனைவி மீனாட்சி நெருங்கி பழகியுள்ளார். உறவினர் என்பதால் அதனை அவர் பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், மீனாட்சிக்கும் பிரதீபுக்குமான உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது குறித்து தெரிய வரவே சுப்ரமணியா தனது மனைவி மற்றும் பிரதீபை கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க : கணவனின் ஆண் உறுப்பை அறுத்த இரண்டாவது மனைவி.. அதிர்ச்சி சம்பவம்!
ஆனால், அவர்கள் தங்களது உறவை கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், தங்களது உறவுக்கு சுப்ரமணியாவை தடையாக நினைத்த மீனாட்சி மற்றும் பிரதீப் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக பிரதீப் தனது நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சுப்ரமணியாவை கொலை செய்த அந்த கும்பல் தலைமறைவாகியுள்ளது. அவர்களுடன் சேர்ந்து மீனாட்சியும் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில், அவர்கள் மறைந்திருந்த இடம் போலீசாருக்கு தெரியவந்த நிலையில், 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.