Air India : தொழில்நுட்ப கோளாறு.. கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. பயணிகள் அவதி!
Air India Flight Cancelled | கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு புறப்படுவதற்காக ஏர் இந்தியா விமானம் ஒன்று தயாராக இருந்தது. இந்த நிலையில், கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது.

கொச்சி, ஆகஸ்ட் 18 : நேற்று (ஆகஸ்ட் 17, 2025) கேரளாவில் (Kerala) இருந்து டெல்லி (Delhi) செல்ல புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் (Air India Flight) கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் டேக் ஆஃப் ஆக தயாரான நிலையில், அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான குழு விமானத்தை உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்
கேரளா மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏஐ 504 என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. விமானம், விமான நிலையத்தில் இருந்து டேக் ஆஃப் ஆக தயாரானபோது அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமான குழு கண்டுபிடித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி விமான குழு உடனடியாக விமானத்தை ரத்து செய்துள்ளது.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு.. புதைந்த வீடுகள்.. 4 பேர் உயிரிழப்பு
இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்ட அந்த விமானம், கோளாறு சரிசெய்வதற்கான தனியான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பயணிகள் அனைவரும் பயணத்திற்காக காத்திருந்த நிலையில், விமானத்தின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 18, 2025 அன்று அதிகாலை 1 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தொடர்ந்து கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் ஏர் இந்தியா விமானங்கள்
ஏர் இந்தியா விமானங்கள் புறப்படுவதற்கு தயாராக இருக்கும் நிலையில், கடைசி நேரங்களில் ரத்து செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 3, 2025 அன்று புவனேஸ்வரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானம் ஒன்று தயாராக இருந்தது. இந்த நிலையில், கடைசி நேரத்தி உயர் வெப்பநிலை கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க : தரை இறங்கும்போது இண்டிகோ விமானத்தில் பரபரப்பு.. அலறிய பயணிகள்!
இதேபோல ஆகஸ்ட் 16, 2025 அன்று மிலன் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. ஆனால், விமானத்தில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட பராமரிப்பு பணி குறைபாடு காரணமாக அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு ஏர் இந்தியா விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.