Air India Flight: ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!
Air India AI2455 Emergency Landing: திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் AI2455, சென்னையில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏர் இந்தியா சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 11: திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் (Air India Flight) எண் AI2455 நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, விமானம் சென்னையில் (Chennai) பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால், எந்தவொரு பாதிப்பும் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். இதையடுத்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் காங்கிரஸ் எம்.பி வேணுகோபால் (Congress MP Venugopal) உள்பட பயணிகள் அனைவரும் டெல்லிக்கு திரும்பினர்.
ALSO READ: அமெரிக்காவுக்கு ஸ்மார்ட்போன் அதிகம் வழங்கும் நாடு இந்தியா – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
என்ன நடந்தது..? ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் விளக்கம்:
அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ 2025 ஆகஸ்ட் 10ம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு விமானம் எண் AI2455 பறந்து கொண்டிருந்தது. வழியில் வானிலை மோசமாக இருந்ததால் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து. விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் பாதுகாப்பாகவே உள்ளனர். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமானம் குறித்து தேவையான விசாரணை சென்னையில் செய்யப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பயணிகளின் சிரமத்தை குறைக்க சென்னையில் எங்கள் ஊழியர்கள் உதவி செய்தன.
தொடர்ந்து பிரச்சனையில் சிக்கும் ஏர் இந்தியா:
“The flight crew of AI2455 operating from Thiruvananthapuram to Delhi on 10 August made a precautionary diversion to Chennai due to a suspected technical issue and given the weather conditions enroute. The flight landed safely in Chennai, where the aircraft will undergo the…
— ANI (@ANI) August 10, 2025
AI2455 எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 10ம் தேதி 8 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. சில பிரச்சனைகள் ஏற்பட்டு சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக வானில் விமானம் வட்டமடித்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு, இரவு 10.35 மணியளவில் சென்னையை அடைந்தது. சமீபத்திய வாரங்களில், சில ஏர் இந்தியா விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் அதிகளவில் ஏற்படுவது ஏர் இந்தியாவிற்கு மிகப்பெரிய சிக்கல்களை கொடுத்துள்ளது.
ALSO READ: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. ஆவணங்களை சமர்பிக்க உத்தரவு..
விமானத்தில் இருந்த காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் இதுகுறித்து கூறுகையில், “நானும் நூற்றுக்கணக்கான பயணிகளும் பல எம்.பி.க்களும் ஏர் இந்தியா விமானத்தில் இருந்தோம். விமானம் ஒரு பெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பினோம். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நாங்கள் வலுவான மற்றும் ஆபத்தான நடுக்கங்களை உணர ஆரம்பித்தோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, விமான சிக்னலில் சிக்கல் இருப்பதாகவும், நாங்கள் சென்னைக்குச் செல்ல வேண்டும் என்றும் கேப்டன் எங்களிடம் கூறினார். பாதுகாப்பாக தரையிறங்கினோம்” என்று கூறினார்.