Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமெரிக்காவுக்கு ஸ்மார்ட்போன் அதிகம் வழங்கும் நாடு இந்தியா – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

Tech Manufacturing Boom : பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார். இந்த நிலையில் இந்த நிகழ்வில் பேசிய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு ஸ்மார்ட்போன் அதிகம் வழங்கும் நாடு இந்தியா – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
அஷ்வினி வைஷ்ணவ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Aug 2025 20:59 PM

பெங்களூரு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), ஆகஸ்ட் 10, 2025 அன்று வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். மேலும் ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ சேவையையும் அவர் துவங்கி வைத்தார்.  பெங்களூருவில் 3 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய மத்திய  ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,  அமெரிக்காவுக்கு ஸ்மார்ட்போன் (Smartphone) அதிக அளவில் வழங்கும் நாடாக இந்தியா வளர்ச்சியைடைந்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,  கடந்த 11 ஆண்டுகளில் நம் நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 6 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது அதன் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடி மதிப்பை எட்டியுள்ளது என்று பேசியுள்ளார்.

வளர்ச்சிப் பாதையில் இந்தியா

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு வளரும் பொருளாதார நாடு என அழைக்கப்பட்ட இந்தியா தற்போது பிரகாசமான பொருளாதார மையமாக பார்க்கப்படுககிறது.  கர்நாடகா மாநிலம் தேவனஹள்ளி பகுதி, ஐபோன் உற்பத்தியின் மிக முக்கிய இடமாக மாறி வருகிறது.  தொழில்நுட்ப சேவைகளை அனைவருக்கும் எளிதில் கிடைக்க செய்வதே பிரதமர் மோடியின் முக்கிய குறிக்கோள். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 2 மொபைல் உற்பத்தி யூனிட்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 300க்கும் மேற்பட்ட யூனிட்களாக வளர்ந்துள்ளது. கடந்த 2014 முதல் 2015 வரை விற்கப்பட்ட மொபைல்களின் எண்ணிக்கையில் 26 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. மற்ற அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று நிலவரப்படி, 99.2 சதவிகித மொபைல்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

இதையும் படிக்க : பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசிய வீடியோ

 

இதையும் படிக்க : உலகில் நடக்கும் நேரடி பணப் பரிவர்த்தனைகளில் 50% யுபிஐ.. பிரதமர் மோடி பெருமிதம்!

கடந்த 2013 முதல் 2014 ஆம் நிதியாண்டில் மொபைல் உற்பத்தி மதிப்பு ரூ.18,900 கோடியாக இருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு நிதியாண்டில் இது ரூ.4,22,000 கோடியாக உயர்ந்துள்ளது.  ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்  பொருட்களின் உற்பத்தியில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா பெற்றுள்ள இந்த சாதனை உலக அளவில் இந்தியாவின் நலையை மேலும் வலுப்படுத்தும் என்றார்.