Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. 20 சதவீதம் தள்ளுபடி.. எப்போது? யார் யாருக்கு?

Railway Offers 20 Percent Discount : பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ரிட்டர் டிக்கெட்டுக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் வரும் பண்டிகை தினங்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. 20 சதவீதம் தள்ளுபடி.. எப்போது? யார் யாருக்கு?
ரயில் டிக்கெட்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 10 Aug 2025 06:10 AM

சென்னை,  ஆகஸ்ட் 10 : தீபாவளி போன்ற பண்டிகை நாட்களுக்கு ரயில்களில் பயணிப்பவர்கள் டிக்கெட் தொகையில் 20 சதவீத தள்ளுபடியை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, சுற்றுப் பயணத் தொகுப்பிற்கு அடிப்படைக் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில்வே.  பல்வேறு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றன. பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால், அனைத்து ரயில்கள் நிலையங்கள் பயணிகள் கூட்டம் அதிமாகவே இருக்கும். இதனால், பயணிகள் வசதிக்காக பல்வேறு சலுகைகள் ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பை  ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி,  ‘ரயில்வே சுற்றுப் பயண தொகுப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் பயணிகள் திரும்பும் பயணத்தின் அடிப்படை கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். தசரா, தீபாவளி மற்றும் சத் பூஜை போன்ற இந்த சலுகை பொருந்தும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறுகையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடை இல்லாத முன்பதிவுகளை உறுதி செய்யவும், பயணிகளுக்கு அதிக வசதி செய்து தரவும், பண்டிகை காலங்களில் அதிக தூரம் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்தை வசதியானதாக மாற்றவும் ரயில்வே முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Also Read : தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றமா..? ஐஆர்சிடிசி முக்கிய அறிவிப்பு!

சிறப்பு ரயில்கள் உட்பட இரு வழித்தடங்களிலும் ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்யவும், தள்ளுபடி கட்டணத்தில் பண்டிகை பயண தொகுப்புத் திட்டத்தை சோதனை அடிப்படையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன கூறியது. திரும்பும் பயணத்திற்கான அடிப்படைக் கட்டணத்தில் மட்டுமே 20 சதவீத மொத்த தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

20 சதவீதம் தள்ளுபடி

இந்தத் திட்டத்தின் கீழ், பயண தொகுப்பிற்கு முன்பதிவு செய்யும் போது தள்ளுபடிகள் பொருந்தும். இந்த திட்டத்திற்கு பயணச்சீட்டை முதலில் 13 அக்டோபர் 2025 முதல் 26 அக்டோபர் 2025 வரையில் புறப்படும் தேதியை முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை இணைப்பு பயண அம்சத்தைப் பயன்படுத்தி திரும்பும் பயணத்துக்குப் பயணச் சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். திரும்பும் பயணத்தை முன்பதிவு செய்வதற்கு தற்போதைய 60 நாள் முன்பதிவு காலம் பொருந்தாது.

திரும்பும் பயணத்திற்கான அடிப்படைக் கட்டணத்தில் மட்டுமே 20 சதவீதம் மொத்த தள்ளுபடிகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் முன்பதிவு, செல்லும் பயணம் மற்றும் திரும்பும் பயணத்திற்கு ஒரே வகுப்பு தான் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கு கட்டணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது. ஃப்ளெக்ஸி கட்டணம் கொண்ட ரயில்களைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களிலும் செலுப்படியாகும். எந்தவொரு பயணத்திலும் இந்த பயணச் சீட்டுகளில் தேதி உள்ளிட்ட எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது.

Also Read : பயணிகளுக்கு அதிர்ச்சி.. அதிரடியாக உயர்ந்த ரயில் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?

பயண டிக்கெட்டுகள் மற்றும் திரும்பும் பயண டிக்கெட்டுகள் இரண்டும் ஒரே முறையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யப்பட வேண்டும். சலுகை கட்டணத்தில் திரும்பும் பயண முன்பதிவின் போது தள்ளுபடி, ரயில் பயண கூப்பன்கள், வவுச்சர் அடிப்படையிலான முன்பதிவு, பாஸ்கள் அல்லது PTOகள் அனுமதிக்கப்படாது. ஆன்லைன் முன்பதிவு அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.