Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tatkal Ticket : ஐஆர்சிடிசி கணக்கில் ஆதாரை இணைப்பது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Aadhaar Link to IRCTC Account | இனி வரும் காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ஆதார் வெரிஃபிகேஷன் முக்கியம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில், தட்கட் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி கணக்கில் ஆதாரை இணைப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Tatkal Ticket : ஐஆர்சிடிசி கணக்கில் ஆதாரை இணைப்பது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 23 Jun 2025 13:20 PM

ஐஆர்சிடிசியில் (IRCTC – Indian Railway Catering and Tourism Corporation) ஆதார் சரிப்பார்பு (Aadhaar Verification) மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு (Tatkal Ticket Booking) செய்யும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே (Indian Railway) அறிவித்துள்ளது. இதன் காரணமாக,  ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் கார்டை இணைப்பதற்கான (Aadhaar IRCTC Account Link) கட்டாயம் உருவாகியுள்ளது. இல்லை என்றால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழல் உருவாகிவிடும். இந்த நிலையில் ஐஆர்சிடிசி கணக்கில் ஆதாரை இணைப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல தேவைகளுக்கு கட்டாயமாக உள்ள ஆதார் கார்டு

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI – Unique Identification Authority of India) வழங்கப்படும் 12 இலக்க எண் கொண்ட இந்த ஆதார் கார்டு அனைவருக்கும் கட்டாய ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு (Ration Card), பான் கார்டு (PAN – Permanent Account Number) உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் கார்டை இணைத்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இதே போல வங்கி கணக்கிருக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. இவ்வாறு பல தேவைகளுக்கு ஆதார் முக்கியமா ஆவணமாக விளங்கும் நிலையில், ஐஆர்சிடிசி-ல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் தற்போது ஆதார் கட்டாயமாக உள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஆதார் வெரிஃபிகேஷன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

தட்கல் டிக்கெட் என்பது விரைவு ரயிலில் பயணம் செய்யும்போது அந்த ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணி ஏசி பெட்டிகளுக்கான முன்பதிவும், 11 மணிக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும் முன்பதிவும் தொடங்கும். இந்த முறையை பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால், இந்த முறையில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை குறைக்க மத்திய ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்தது. அதன்படி, இனி வரும் காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவித்தது.

ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் கார்டை இணைப்பது எப்படி?

  1. ஐஆர்சிடிசி கணக்கி வைத்திருக்கும் பயனர்கள், ஐஆர்சிடிசி-ன் https://www.irctc.co.in/nget/train-search அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு விவரங்களை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
  3. பிறகு அங்குள்ள மை அக்கவுண்ட் (My Account) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  4. அதில், கணக்கு வைத்திருக்கும் நபரின் ஆதார் எண், பெயர் உள்ளிட்ட விவரங்களுக்கான படிவம் இடம்பெற்றிருக்கும்.
  5. அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்து, ஓடிபி பெற்று அதனையும் பதிவிட வேண்டும்.
  6. ஓடிபி பதிவு செய்த பிறகு உங்களது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக உங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைத்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.