AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aadhaar Card : ஆதார் கார்டு பயன்படுத்தி ATM-ல் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

Cash Withdraw Using Aadhaar Card | இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ள நிலையில், ஆதாரை பயன்படுத்தி பல்வேறு வேலைகளை செய்ய முடியும். இந்த நிலையில், ஆதார் கார்டு பயன்படுத்தி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Aadhaar Card : ஆதார் கார்டு பயன்படுத்தி ATM-ல் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jun 2025 16:09 PM IST

இந்தியாவை பொருத்தவரை பண பரிவர்த்தனைகளை (Money Transaction) மேற்கொள்ள பல வழிகள் உள்ளன. முன்பெல்லாம் ஏதேனும் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால், வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், தற்போது அவற்றுக்கெல்லாம் அவசியம் இல்லை. இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகள், ஆன்லைன் பேங்கிங் (Online Banking) ஆகியவற்றை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இது தவிர ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்களுக்கு சென்றும் பண பரிவர்த்தனை செய்யலாம். பண பரிவர்த்தனை செய்ய இவ்வளவு வழிகள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால், ஆதார் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. உண்மை தான் ஆதார் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) அனுமதி வழங்குகிறது.

இந்தியாவின் முக்கிய அடையாள ஆவணமாக உள்ள ஆதார்

இந்தியாவில் உள்ள பொதுமக்களின் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. ஆதார் கார்டு இல்லை என்றால், அரசின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற முடியாத சூழல் உள்ளது. எனவே ஒவ்வொருவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. அரசின் திட்டங்கள், சேவைகள் மட்டுமன்றி ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது வரை என அன்றாட வாழ்வில் பல தேவைகளுக்காக ஆதார் கட்டாயம் கோரப்படுகிறது. இவ்வாறு பல தேவகளுக்கு சிறந்த ஆதாரமாக உள்ள ஆதார் மூலம் பண பரிவர்த்தனை செய்யவும் முடியும். அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ஆதார் கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்வது எப்படி?

இந்திய தேசிய கொடுப்பணவு கழகம் AEPS (AEPS – Aadhaar Enabled Payment System) மூலம் ஆதார் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க அனுமதி வழங்குகிறது. இந்த AEPS ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க எண் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை, பண இருப்பு உள்ளிட்ட நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.

  1. அதற்கு முதலில் AEPS  அம்சம் உள்ள மைக்ரோ ஏடிஎம்-க்கு செல்ல வேண்டும்.
  2. பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை அதில் உள்ளிட வேண்டும்.
  3. பிறகு உங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
  4. பிறகு அதில் தோன்று பணம் எடுத்தல் (Cash Withdrawal) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  5. பிறகு நீங்கள் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை உள்ளிட வேண்டும்.
  6. அதனை தொடர்ந்து உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான அனுமதி கோரி வங்கியில் இருந்து உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.
  7. அதற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி மிக சுலபமாக ஆதார் கார்டு மூலம் பணம் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us