Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadhaar Card : இனி ஆவணங்களை சரிபார்க்க ஆதார் வேண்டாம்.. ஒரு QR கோடு போதும்!

No More Aadhaar Copies | இந்தியாவில் அனைத்து பொதுமக்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. அரசின் சேவைகளை பெறுவது, ஆவணங்களை சரிபார்ப்பது உள்ளிட்டவற்றுக்காகவும் ஆதார் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டு சேவைகளை QR கோடு மூலம் பெறும் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.

Aadhaar Card : இனி ஆவணங்களை சரிபார்க்க ஆதார் வேண்டாம்.. ஒரு QR கோடு போதும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Jun 2025 17:05 PM

இந்தியாவில் அரசின் சேவைகளை பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஆதார் அட்டையின் நகலை சமர்பிக்காமல் கியூஆர் (QR – Quick Response) கோடு மூலம் ஆவணங்களை சரிப்பார்க்கும் செயலியை அறிமுகம் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) முடிவு செய்துள்ளது. ஆதார் கார்டு நகல்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இந்த புதிய முயற்சி குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக உள்ள ஆதார் கார்டு

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லை என்றால் பல வேலைகளை செய்து முடிக்க முடியாத சூழல் தான் தற்போது நிலவுகிறது. அரசின் திட்டங்களை பெறுவது முதல் பள்ளி கல்லூரிகளில் சேர்வது, பணிக்கு சேர்வது வரை என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. இது தவிர ஆவணங்கள் சரிபார்ப்பிற்கும் ஆதார் கட்டாயமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் எப்போதும் தங்கள் கைகளில் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டிய நிறைவுள்ளது. ஒரிஜினல் ஆதார் கார்டு தொலைந்துவிடும் அபாயம் உள்ள நிலையில், பலரும் எப்போதும் தங்களது கையில் ஆதார் நகலை வைத்திருக்கின்றனர்.

இனி ஆதார் நகல் வேண்டாம், QR கோடு போதும் – UIDAI முடிவு

இந்தியாவை பொருத்தவரை வங்கி சேவை, சிம் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் எப்போது தங்கள் கைகளில் ஆதார் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் தான், பொதுமக்களின் சுமையை குறைக்க, மொபைல் செயலியை அறிமுகம் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பொதுமக்கள் ஆதார் நகலை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த செயலியின் மூலம் QR கோடை பயன்படுத்தி செயலி வாயிலாகவே ஆதார் அட்டையை சரிப்பார்க்கும் முறை அமலுக்கு வர உள்ளது. இந்த செயலியின் மூலம் பாதி மறைக்கப்பட்ட ஆதார் கார்டை மின்னணு முறையில் பகிர முடியும். சாதரணமாக உள்ள ஆதார் கார்டில் இருப்பது போல இந்த ஆதார் கார்டில் 12 எண்கள் இருக்காது. மாறாக இதில் கடைசி நான்கு எண்கள் மட்டுமே இருக்கும். அதுமட்டுமன்றி, இந்த புதிய செயலியின் மூல ஆதார் கார்டில் பெயர், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் உள்ளிட்டவற்றை வீட்டில் இருந்தே செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.