Aadhaar Update : இலவச ஆதார் அப்டேட்.. UIDAI மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு.. எப்போது வரை?
Free Aadhaar Update Extended | ஆதார் கார்டில் உள்ள விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்காக காலக்கெடுவை நீத்து UIDAI அறிவித்துள்ளது.

ஆதார் கார்டில் (Aadhaar Card) உள்ள விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) கூறுகிறது. அதன்படி, ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14, 2025 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆதார் கார்டுகளை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (ஜூன் 14, 2025) நிறைவடைந்த நிலையில், காலக்கெடுவை நீட்டித்து இந்திய தண்டத்து அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 14, 2026 வரை ஆதார் கார்டுகளை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்
இந்திய குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையும் வழங்கும் ஆதார் கார்டில், 12 இலக்க எண், பெயர், முகவரி, வயது, பாலினம், கண்ரேகை, கைரேகை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த தகவல்கள் மாற்றத்திற்கு உரியது என்பதால் அதனை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த தகவல்கள் அப்டேட் செய்யப்பட வேண்டும் என UIDAI கூறுகிறது. ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய ஜூன் 14, 2025 கடைசி தேதி என ஆதார் அறிவித்திருந்த நிலையில், தற்போது கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, ஜூன் 14, 2026 வரை ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம்.




ஆதார் விவகரங்களை அப்டேட் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
#UIDAI extends free online document upload facility till 14th June 2026; to benefit millions of Aadhaar Number Holders. This free service is available only on #myAadhaar portal. UIDAI has been encouraging people to keep documents updated in their #Aadhaar. pic.twitter.com/XkwZ3owUtw
— Aadhaar (@UIDAI) June 14, 2025
ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?
- அதற்கு முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் https://uidai.gov.in/இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் ஆதாரை புதுப்பிக்கவும் (Update Aadhaar) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் 12 இலக்க ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
- மொபைல் எண்ணை பதிவிட்டதும், அதற்கு வரும் ஒடிபியை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
- பிறகு என்ன என்ன விவரங்களை மாற்றம் செய்ய வேண்டுமோ அதை செய்து, அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- நீங்கள் புதுப்பிக்க வேண்டிய தகவல்கள் எல்லாம் சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்துவிட்டு Submit செய்ய வேண்டும்.
மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக ஆதார் விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.