Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உலகில் நடக்கும் நேரடி பணப் பரிவர்த்தனைகளில் 50% யுபிஐ.. பிரதமர் மோடி பெருமிதம்!

PM Narendra Modi Bengaluru Speech | இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் 4 ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் உலகில் நடக்கும் நேரடி பணப் பரிவர்த்தனைகளில் 50 சதவிகிதம் யுபிஐ மூலம் நடப்பதாக கூறியுள்ளார்.

உலகில் நடக்கும் நேரடி பணப் பரிவர்த்தனைகளில் 50% யுபிஐ.. பிரதமர் மோடி பெருமிதம்!
பிரதமர் மோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Aug 2025 18:43 PM

பெங்களூரு, ஆகஸ்ட் 10 : உலகில் நடக்கும் நேரடி பணப் பரிவர்த்தனைகளில் 50 சதவிகிதம் யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் தான் நடப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minster Narendra Modi) பெருமிதம் தெரிவித்துள்ளார். பெங்களூரின் ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையே உள்ள மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10, 2025) தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த இந்திய பிரதமர் மோடி

பெங்களூரின் ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையே உள்ள மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூர் மாறி உள்ளது. உலக அளவில் தொழில்நுட்ப துறை இந்தியாவின் கொடியை ஏற்றிய நகரம் இது என்றால் அது மிகையாகாது. பெங்களூருவின் வெற்றிக்கு பின்னணியில் இங்குள்ள மக்களின் கடுமையான உழைப்பும், திறமையும் தான் காரணம். இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்கிறது. இந்தியாவின் 50 சதவீதத்திற்கும் அதிகமான பண பரிவர்த்தனை யூபிஐ மூலம் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு.. கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை.. என்ன மேட்டர்?

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

இதையும் படிங்க : அமெரிக்காவிடம் இருந்து ஆயுத கொள்முதலை நிறுத்தும் இந்தியா? – உண்மை என்ன?

24 நகரங்களில் 1000 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் சேவை – பிரதமர்

அது குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தற்போது 24 நகரங்களில் சுமார் 1.000 கிலோ மீட்டருக்கு அதிகமான தொலைவுகளில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு மூன்று தேசிய நீர் வழிகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. இப்போது 30 நீர் வழிகள் உள்ளன. 2014 வரையில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன தற்போது அதன் எண்ணிக்கை 1600க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.