Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PM Modi: விவசாயிகளின் நலனே முக்கியம்.. சவாலுக்கு நான் தயார்! அமெரிக்க வரி குறித்து பேசிய பிரதமர் மோடி!

PM Modi Responds to US Tariff: அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மீது கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி விவசாயிகளின் நலன் முதன்மை எனக் கூறியுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்த்து, இந்தியா விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரின் நலனில் சமரசம் செய்யாது எனவும், அதற்கு எந்த விலை கொடுத்தாலும் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

PM Modi: விவசாயிகளின் நலனே முக்கியம்.. சவாலுக்கு நான் தயார்! அமெரிக்க வரி குறித்து பேசிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Aug 2025 12:58 PM

டெல்லி, ஆகஸ்ட் 7: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இந்தியா மீதான வரி உயர்வை அறிவித்ததை தொடர்ந்து இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 7ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் நமக்கு நமது விவசாயிகளின் நலவே முதன்மையானது. அதற்காக நாம் என்ன விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி என்று கூறியுள்ளார். முன்னதாக, ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்திற்காக இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 6ம் தேதி அறிவித்தார். இதற்கு முன்பு, இந்தியா மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: கல்வான் தாக்குதலுக்கு பிறகு, முதன்முறையாக சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்க வரி குறித்து பேசிய பிரதமர் மோடி:

டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது தொடர்பாக பேசினார். அதில், “இந்தியா அதன் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது. இதற்காக, நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். ஆனால், நான் அதற்கு தயாராக இருக்கிறேன், இந்தியா தனது விவசாயிகளுடன் உறுதியாக நிற்கிறது. மேலும், அவர்களின் நலனுக்கான என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.” என தெரிவித்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதனை புகழ்ந்த பிரதமர் மோடி:

பிரதமர் மோடி தொடர்ந்து, “ எம்.எஸ்.சுவாமிநாதனுடனான எனது பழக்கவழக்கங்கள் பல ஆண்டுகள் பழமையானது. குஜராத்தின் ஆரம்ப நிலைமைகள் குறித்து பலருக்கு தெரியும். வறட்சி மற்றும் புயல்கள் காரணமாக விவசாயம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. கட்ச் பகுதியில் பாலைவனம் விரிவடைந்து கொண்டிருந்தது. நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மண் சுகாதாரம் குறித்து ஒன்றாக பணியாற்ற தொடங்கினோம்.

ALSO READ: அமெரிக்காவின் கூடுதல் வரி நியாயமற்றது.. எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசாங்கம்..!

இந்த விஷயத்தில் அதில் மிகுந்த ஆர்வம் காட்டியது மட்டுமின்றி, வெளிப்படையாக எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். எங்களுக்கு வழிகாட்டினார். அவரது பங்களிப்பால், இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எந்த ஒரு சகாப்தத்திற்கோ அல்லது எந்த ஒரு துறைக்கோ மட்டும் மட்டுப்படுத்தப்படாத சில ஆளுமைகளின் பங்களிப்பு உள்ளது. பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் அத்தகைய ஒரு சிறந்த விஞ்ஞானி, பாரத தாயின் உண்மையான மகன். அவர் அறிவியலை பொது சேவைக்கான ஊடகமாக மாற்றினார். நாட்டின் உணவுப் பாதுகாப்பை தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டார். வரவிருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளை வழிநடத்தும் ஒரு நனவை எம்.எஸ்.சுவாமிநாதன் எழுப்பினார்.” என்றார்.