Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

US Tariffs on India: அமெரிக்காவின் கூடுதல் வரி நியாயமற்றது.. எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசாங்கம்..!

India US Trade Relations: அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்ததற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது சந்தை சார்ந்தது எனவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காக செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

US Tariffs on India: அமெரிக்காவின் கூடுதல் வரி நியாயமற்றது.. எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசாங்கம்..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் - இந்திய பிரதமர் மோடிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Aug 2025 21:50 PM

டெல்லி, ஆகஸ்ட் 6: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இந்தியாவின் மீது மீண்டும் 25 சதவீத கூடுதல் வரியை விதித்தது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் (Indian Ministry of External Affairs) அறிக்கை மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. இதில், அமெரிக்காவின் கூடுதல் 25 சதவீத வரி விதிப்பு நியாயமற்றது, காரணமற்றது. ரஷியாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வது, முழுவதும் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டது. இந்தியா தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. நாட்டின் நலன்களை பாதுகாக்க செய்ய வேண்டியதை செய்வோம் என தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் அறிக்கை:


இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்தது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில், “ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். எங்கள் இறக்குமதிகள் சந்தை அடிப்படையிலானவை. நாட்டு மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன என்பதும் இதில் அடங்கும். எனவே, பல நாடுகள் தங்கள் சொந்த நலனுக்காகச் செய்யும் பணிக்காக அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் வரியை விதிக்கத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது ஒரு நியாயமற்ற, அநீதியான மற்றும் தேவையற்ற முடிவு என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.” என தெரிவித்தது.

ALSO READ: இந்தியா மீது 50% வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. முழு விவரம்!

இந்தியா மீது 50% வரி:

ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 6ம் தேதி கையெழுத்திட்டார். இதன் மூலம், அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான வரி இப்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆரம்ப வரியான 25 சதவீதம் வருகின்ற 2025 ஆகஸ்ட் 7 அதாவது நாளை முதல் அமலுக்கு வரும். கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும்.

ALSO READ: 24 மணி நேரத்தில் இந்தியாவின் வரி மேலும் உயரும் – எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

முன்னதாக, நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 5ம் தேதி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குபவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் இந்தியா மீது கடும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். இந்த எண்ணெய் விற்பனையிலிருந்து கிடைக்கும் பணத்தை ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துகிறது என்றும், மலிவான எண்ணெயைப் பெற இந்தியா இந்த அம்சத்தில் கவனம் செலுத்தவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.