ரஷ்யாவில் 600 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்த எரிமலை.. நிலநடுக்கத்தின் எதிரொலி?
Russia's Krasheninnikov Volcano Eruption | ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 600 ஆண்டுகளுக்கு முதல் முறையாக எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக எந்த வித பெரிய பாதிப்புகளும் ஏற்படவில்லை என அரசு கூறியுள்ளது.

மாஸ்கோ, ஆகஸ்ட் 06 : ரஷ்யாவில் (Russia) சுமார் 600 ஆண்டுகளுக்கு பிறகு க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்து சிதரியுள்ளது. ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக கடுமையான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்ட நிலையில், தற்போது 600 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்புக்கு சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் கூட முக்கிய காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பின் தீவிரம் என்னவாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறிய எரிமலை
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்து சிதரியுள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவில் 7.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் காரணமாக இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த எரிமலையை சுற்றி பெரிய அளவில் பொதுமக்கள் வசிக்காததால், எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என் அந்த நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.




இதையும் படிங்க : அரிய வகை முழு சூரிய கிரகணம் எப்போது? நாசா சொன்ன உண்மை..
6000 மீட்டர் உயரம் வரை படர்ந்துள்ள சாம்பல் மேகங்கள்
NEW: More Incredible video of The FIRST HISTORICALLY RECORDED ERUPTION of Krasheninnikov Volcano in Kamchatka, Russia.
Krasheninnikov last erupted between 1423 and 1503 (522 to 602 years ago)
📹 Pyotr Shpilenokpic.twitter.com/soRpWkapkM
— Volcaholic 🌋 (@volcaholic1) August 4, 2025
இந்த எரிமலை வெடிப்பு குறித்து கூறும் உள்ளூர் செய்தி ஊடகங்கள், இது வரலாற்றில் பதிவான க்ராஷென்னினிகோவ் எரிமலையின் முதல் வெடிப்பாகும். சுமார் 600 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எரிமலை முதன் முறையாக வெடித்துள்ளது என கூறியுள்ளன. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக அங்கு சுமார் 6000 மீட்டர் உயரம் வரை சாம்பல் மேகங்கள் படர்ந்துள்ளதாக ரஷ்ய அரசு கூறியுள்ளது. அந்த சாம்பல் மேகங்கள் பசிபிக் பெருங்கடலை நோக்கி செல்வதால மனிதர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரஷ்யா நோக்கி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப உத்தரவு.. அதிபர் டிரம்ப் அதிரடி..
இந்த எரிமலை வெடிப்பு காரணமாக அங்கு ஆரஞ்சு ஏவியேஷன் அலார்ட் (Orange Aviation Alert) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு விமானங்கள் பறக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.