நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் டாக்டர் செய்த செயல்.. குவியும் பாராட்டு!
Russia Earthquake : ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதோடு, சுனாமியும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு மத்தியில், மருத்துவர்கள் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். நோயாளியை கெட்டியாக பிடித்தப்படி, இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இந்த அரிதான நிகழ்வின் வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

ரஷ்யா, ஜூலை 30 : ரஷ்யாவில் 2025 ஜூலை 30ஆம் தேதியான இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Russia Earthquake) ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்ஸ்கா பகுதியில் 8.8 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமியும் ஏற்பட்டது.இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருக்கடல் முழுவதும் சுனாமியை ஏற்படுத்தியது. 4 மீட்டர் (12 அடி) வரை சுனாமிகளை ஏற்படுத்தியது. இந்த சுனாமியால் ரஷ்யா மட்டுமின்றி, சீனா, ஜப்பான், அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. அமெரிக்காவில் 4 முதல் 6 அடி உயரம் வரை அலைகள் பதிவாகி உள்ளது. ரஷ்யாவில் ஏற்பட்ட சுனாமியால் துறைமுக நகரத்தில் உள்ள கட்டிடங்கள் கடல் நீரில் மூழ்கின.
சுமார் 2,000 பேர் கொண்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவில் இருந்த கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதனால், மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தஞ்சம் புகுந்தனர். இந்த சூழலில், ஒரு வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அதாவது, நிலநடுக்கத்திற்கு நடுவில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.




Also Read : பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு!
நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சை
🚨 VEJA: Vídeo mostra o exato momento em que um terremoto de magnitude 8,8 atinge a Rússia durante uma cirurgia em um hospital.pic.twitter.com/wtRnOhlhU5
— Café News (@cafenews_) July 30, 2025
அதாவது, ரஷ்யாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத நேரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் பதற்றம் அடையாமல், அறுசை சிகிச்சையை மேற்கொண்டனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால், சில மருத்துவர்கள் நோயாளியை கெட்டியாக பிடிக்க, மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார். தொடர்ந்து, அறுவை சிகிச்சையும் நன்றாக முடிந்துள்ளதாகவும், மருத்துவர்கள், நோயாளியும் நலமாக இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read : ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை..
இந்த அரிய நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கவனம் ஈர்த்துள்ளது. இதற்கு மருத்தவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தங்கள் நோயாளிகளைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்ததற்காக மருத்துவர்களைப் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.