Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பூமியை நோக்கி வரும் விமான அளவிலான சிறுகோள்.. ஆபத்தை ஏற்படுத்துமா?

Flight Sized Asteroid Near Earth | வானத்தில் சிறுகோள்கள் நகர்ந்துக்கொண்டே இருக்கும் நிலையில், இன்று (ஜீலை 30, 2025) விமான அளவிலான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துக்கொண்டு இருப்பதாகவும், அது பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பூமியை நோக்கி வரும் விமான அளவிலான சிறுகோள்.. ஆபத்தை ஏற்படுத்துமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Jul 2025 14:07 PM

இன்று (ஜூலை 30, 2025) 2025 OL1 என்ற விமான அளவிலான சிறுகோள் (Flight Sized Asteroid) ஒன்று பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்லும் என்று நாசா (NASA – National Aeronautical Space Administration) தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் ஒரு விமானத்தின் அளவை கொண்டு இருந்தாலும், அது பூமியை கடந்து செல்லும்போது எந்த வித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும், பாதுகாப்பாக கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில், பூமிக்கு மிக நெருக்கமாக வருவுள்ளதாக கூறப்படும் அந்த சிறுகோள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பூமியை நெருங்கும் விமான அளவிலான கோள் – பாதிப்பை ஏற்படுத்துமா?

இது குறித்து நாசா கூறியுள்ளதாவது, பூமியை நெருங்க உள்ள அந்த சிறுகோள் சுமார் 110 அகலம் கொண்டு இருக்கும். பயணிகள் விமானத்தின் அளவுடன் ஒப்பிட்டப்பட்ட இது மணிக்கு சுமார் 27,200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். பூமியில் இருந்து சுமார் 12.9 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இது கடந்து செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் இருக்கும் தூரம் பாதுகாப்பானதாக தோன்றினாலும், அதன் அளவி கண்காணிக்கப்பட வேண்டிய அவசியத்தை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : Russia Flight Accident : கீழே விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்.. 49 பேர் பலி?.. மீட்பு பணிகள் தீவிரம்!

பூமியை நோக்கி வரும் இந்த விண்கல்லால் ஆபத்து எதுவும் இல்லை

பூமிக்கு அருகே வந்துக்கொண்டு இருக்கும் இந்த விண்கல் ஆபத்தானது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது ஒரு விண்கல் ஆபாத்தானதாக வைக்கப்படுத்தப்பட சில காரணிகள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. குறிப்பாக ஒரு விண்கல் 74 லட்சம் கிலோ மீட்டருக்குள் வர வேண்டும். அப்படி இல்லையென்றால் குறைந்தது 85 மீட்டர் அகலமாவது கொண்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது பூமியை நோக்கி வந்துக்கொண்டு இருக்கும் இந்த சிறுகோள் இந்த இரண்டு அளவுகோல்களையும் பூர்த்தி செய்யாமல் உள்ளது. இதன் காரணமாக அது ஆபத்து இல்லாதது என்று தோன்றினாலும், விஞ்ஞானிகள் தொடர்ந்து அதனை கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பாகிஸ்தானை தலைகீழாக புரட்டி போட்ட கனமழை.. ஒரே நாளில் பல உயிரிழப்புகள்!

வானத்தில் உள்ள லட்சக்கணக்கான சிறுகோள்கள் நகர்ந்துக்கொண்டே இருக்கும். அவ்வாறு கோள்கள் நகர்ந்துக்கொண்டே இருக்கும்போது அவை எதிர்பாராத விதமாக வேறொரு கோளின் மீதோ அல்லது கிரகத்தின் மீதோ மோத வாய்ப்புள்ளது. அந்த வகையில் தான் இந்த சிறுகோளும் பூமியை நோக்கி வந்துக்கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.