பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு!
Earthquake in Pakistan | பாகிஸ்தானில் இன்று (ஜூலை 28, 2025) நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் மிக குறைவாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், எங்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத், ஜூலை 28 : பாகிஸ்தானில் (Pakistan) இன்று (ஜூலை 28, 2025) மாலை திடீரென நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. 4 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கிய நிலையில், பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் மதிய நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்தும், அதனால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்
இந்தியாவின் அண்டை நாடுகளான தாய்லாந்து, பாகிஸ்தான் உள்லிட்ட பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 28, 2025) பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுகம் 4 புள்ளிகள் ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறைந்த அளவிலான நிலநடுக்கம் என்பதால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்ப்டவில்லை. இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கிய நிலையில், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.




இதையும் படிங்க : Russia Flight Accident : கீழே விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்.. 49 பேர் பலி?.. மீட்பு பணிகள் தீவிரம்!
4 புள்ளிகள் ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்
EQ of M: 4.0, On: 28/07/2025 02:06:00 IST, Lat: 33.46 N, Long: 71.19 E, Depth: 10 Km, Location: Pakistan.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/f0gLVYeNH3— National Center for Seismology (@NCS_Earthquake) July 27, 2025
இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4 புள்ளி ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. குறைவான அளவிலான நிலநடுக்கமே அங்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க : பாகிஸ்தானை தலைகீழாக புரட்டி போட்ட கனமழை.. ஒரே நாளில் பல உயிரிழப்புகள்!
சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 33.46 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.19 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.