அரிய வகை முழு சூரிய கிரகணம் எப்போது? நாசா சொன்ன உண்மை..
Solar Eclipse 2025: ஆகஸ்ட் 2, 2025 அன்று அரிய வகை முழு சூரிய கிரகணம் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்றும், இந்த சூரிய கிரகணம் 2027, ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிகழும் என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம், ஆகஸ்ட் 2,2025: ஆகஸ்ட் 2 2025 தேதி ஆன இன்று ஒரு வானியல் நிகழ்வு நிகழ போவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. அதாவது இன்று சூரிய கிரகணம் தோன்றும் என்றும் இந்த சூரிய கிரகணமானது நீண்ட நேரம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இது போன்ற ஒரு அறிய முழு சூரிய கிரகணம் பல நூறு ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் தோன்றும் எனவும் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இருப்பினும் நாசா மற்றும் முன்னணி வானியலாளர்கள் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் இது வெறும் வதந்தி என்றும் குறிப்பிட்டுள்ளது கூற்றுப்படி அரிதான மற்றும் நீண்ட சூரிய கிரகணம் உண்மையில் எதிர்பார்க்கப்பட்டாலும் இந்த ஆண்டு அது நிகழாது என்றும் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் ஆகஸ்ட் 2 2027 அன்று நிகழும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது நிகழும் ஒரு வானியல் நிகழ்வாகும். இந்த சமயத்தின் போது சூரிய ஒளியை பூமி மீது பட விடாமல் சந்திரன் மறைக்கும் இந்த சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம் என பல வகைகள் கொண்டது.
அரிய முழு சூரிய கிரகணம் எப்போது?
ஆகஸ்ட் 2, 2027 ஆண்டு நிகழும் சூரிய கிரகணம் 100 ஆண்டுகளை மிக நீண்ட மொத்த கிரகணங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் சுமார் 6 நிமிடங்கள் முழு இருள் நீடிக்கும் என்றும் நாசா உறுதிப்படுத்தி உள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு பல தசாப்தங்களாக இல்லை என்றாலும் அடுத்ததாக 2114 ஆம் ஆண்டில் மீண்டும் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவில் சில பகுதிகளில் மட்டும் தெரியும் எனவும் வாணியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: எனக்கு ஏன் சீட் கொடுக்கல? சட்டென பெண்ணை அறைந்த நபர்.. ஏர்போர்டில் களேபரம்!
இந்த ஆண்டின் சூரிய கிரகணம் எப்போது?
2025 ஆம் ஆண்டு பொறுத்தவரை ஆகஸ்ட் 2ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழாது. அதற்கு பதிலாக இந்த ஆண்டில் இரண்டாவது மற்றும் இறுதி சூரிய கிரகணம் 2025 செப்டம்பர் 21ஆம் தேதி நிகழும் எனவும் இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக தான் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் இந்த பகுதி சூரிய கிரகணம் என்பது இந்தியாவில் தெரியாது.
மேலும் படிக்க: பூமி மீது படையெடுக்க உள்ள வேற்று கிரக வாசிகள்?.. பூமியை நோக்கி வரும் மர்ம பொருள் குறித்து விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
வானியல் தரவுகளின் படி செப்டம்பர் 21 2025 அன்று கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10:59 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 22 2025 அன்று அதிகாலை 3:23 க்கு முடிவடையும் உச்ச கிரகண தருணம் அல்லது உச்ச காலம் என்பது இந்திய நேரப்படி அதிகாலை ஒன்று 1:11 மணிக்கு நிகழும் இந்த சூரிய கிரகத்தினத்தின் மொத்த கால அளவு தோராயமாக நான்கு மணி நேரம் 24 நிமிடங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.