பூமி மீது படையெடுக்க உள்ள வேற்று கிரக வாசிகள்?.. பூமியை நோக்கி வரும் மர்ம பொருள் குறித்து விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
Mysterious Space Object to Hit Earth | வின்வெளி தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2025 நவம்பர் மாதம் பூமி மீது மர்ம விண்வெளி பொருள் ஒன்று தாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

நியூயார்க், ஜூலை 31 : 2025, நவம்பர் மாதத்தில் பூமியின் மீது மர்ம விண்வெளி பொருள் ஒன்று தாக்குதல் நடத்த உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மேன்ஹேட்டன் நகரின் அளவிலான அந்த மர்ம பொருள் பூமியை நோக்கி ஏவப்பட உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அது நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில், பூமியை நோக்கிய ஏவப்பட உள்ளதாக கூறப்படும் மர்ம பொருள் குறித்து விஞ்ஞானிகள் என்ன கூறியுள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.
பூமியின் மீது ஏவப்பட உள்ள மர்ம விண்வெளி பொருள்
பூமியின் ஏவப்பட உள்ளதாக கூறப்படும் அந்த மர்ம விண்வெளி பொருளுக்கு விஞ்ஞானிகள் 3I/அட்லஸ் என பெயரிட்டுள்ளனர். இந்த மர்ம பொருள் ஏலியன்களின் தொழில்நுட்ப உதவியுடன் பூமி மீது திடீர் தாக்குதலை ஏற்படுத்தக்கூடும் என கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ள அந்த மர்ம பொருள் நவம்பர் மாத இறுதியில் சூரியனை நோக்கி வரும் என்றும் அது அவ்வாறு வரும்போது பூமியின் பார்வையில் இருந்து மறைவாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரகசிய அதிவிரைவான மற்றும் சூழ்ச்சியான விஷயங்களை அது நடத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை..




60 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும் மர்ம பொருள்
சிலியில் உள்ள ரியோ ஹர்டாடோ பகுதியில் உள்ள தொலைநோக்கி மூலம் தான் இது முதன் முதலாக கண்டறியப்பட்டது. 10 முதல் 20 கிலோ மீட்டர் அகலம் கொண்ட இந்த மர்ம பொருள் விநாடிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த மர்ம பொருள் சுமார் 700 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதாவது, சூரியனை விட சுமார் 300 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
இதையும் படிங்க : கின்னஸ் சாதனை படைத்த வெறும் 21 வாரங்களில் பிறந்த ஆண் குழந்தை!
இந்த மர்ம பொருள் மணிக்கு சுமார் 2.45 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் நிலையில், சூரிய மண்டலத்தில் மிக விரைவாக பயணம் செய்யக்கூடிய பொருளாக இது உள்ளது. இந்த மர்ம பொருள் பூமியை தாக்கினால் அது கடுமையான விலைவுகளை ஏற்படுத்தும் என்றும் அது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.